பக்கம்:விடையவன் விடைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 31

சொல்லும் வழக்கிலிருந்து இதை உணரலாம். ஒருவன் செப்பம் அடைந்து நிறைதலைப் பண்படுதல் என்று சொல்ல லாம்; அதுவே பண்பாடு என்றும் சொல்வத்தகுவது. செப்பம் பெற்று நிறைவு அடையும் முறையே பண்பாடு, வேறு சிலர் கல்ச்சர் என்ற சொல்லின் ஒலியோடு ஒட்டிக் கலா சாரம் என்ற சொல்லைப் படைத்தனர். பழைய வழக்கில் சால்பு, சான்ருண்மை என்று உள்ள சொற்களே கல்ச்சர் என்பதைக் குறிப்பவை.

115. அருணகிரிநாதர் முருகனே, 'சூர்க்கொன்ற ராவுத் தனே' என்று சொல்கிருர், ராவுத்தன் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன ? அது தமிழ்ச் சொல்லா ? வேறு மொழிச் சொல்லா ?

ராவுத்தன் என்பது குதிரை வீரன் என்ற பொருளுடை யது. அது ரவுத் என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது. டாக்டர் ஐயரவர்கள் ராவுத்தர்’ என்ற கட்டுரையில் இந்தச் சொல்லைப் பற்றிய ஆராய்ச்சியைத் தெரிவித்திருக்கிரு.ர்கள்.

116. மாலை என்பது பிற்பகலைக் குறிப்பதா ? சாயங் காலத்தைக் குறிப்பதா ? -

இரவின் முதல்.யாமம் மாலை என்பது பழைய வழக்கு. பிற்பகல் என்பது ஆங்கிலத்தைத் தழுவிய (aftermoon) வழக்கு, பகலின் பின் நேரத்தைக் குறிப்பது. சாயங்காலம் என்பது, சூரியன் மறையும் நேரத்தைக் குறிப்பது. அதைத் தமிழில் எற்பாடு என்று சொல்வார்கள்.

117. கண்ட்ராவி என்ற சொல்லின் பொருள் என்ன? கண்ண ராவி (கண் அராவி) என்ற தொடரின் சிதைவு

அது. கண்ணே அராவுவதுபோலத் துன்பந் தரும் காட்சி என்ற பொருளில் அது வழங்குகிறது - - .