பக்கம்:விடையவன் விடைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 45

வரும். கோதையர் குஞ்சியுள் தெளிக்கும் தீர்த்தமும்’ என்பது தேவாரம். -

184. முப்பழம், திரிகடுகம் என்ற இரண்டும் ஒன்ரு

வாழை, மா, பலா மூன்றும் முப்பழங்கள்; கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்பவை திரிகடுகம்.

185. முரிதல், முறிதல் - இவ்விரண்டிற்கும் உரிய பொருள் வேறுபாடு என்ன ? - . . . . .. -

முரிதல்-வளைதல்; முறிதல் ஒடிந்து போதல். 18ல் பண்பாடு, பண்பு-இரண்டும் ஒன்ரு : இரண்டும் வெவ்வேறு. பண்படுதல் எ ன் ற பொருளை உடையது, பண்பாடு என்னும் சொல். அதில் பண் என்றும் பாடு என்றும் இருவேறு சொற்கள் உள்ளன. பண்பு என்

பது நல்ல குணத்தைக் குறிக்கிறது. அது பிளவுபடாத தனிச் சொல். - ;: >

187. இராமன் என்ற சொல்லை மரியாதையாகச் சொன் ல்ை இராமனர் என்றுதான் சொல்ல வேண்டுமா? இராமர் என்று சொல்வது தவரு - - - - -

தவறு அன்று, சங்க காலத்துப் புலவர்களாகிய கபிலர், பரணர் என்பவர்களின் பெயர்கள் கபிலனுர், பரணனர் என்று வழங்கவில்லை. இராமர், இராமனர் என்று இரண்டு வகையாகவும் சொல்லலாம். ஆனல் இராமனர் என்பது திட்டமாக ஒருவரையே குறிக்கும். இராமர் என்பது ஒரு வரையும் குறிக்கலாம்; பல இராமர்களையும் குறிக்கலாம்

188. ரோமஜெயம், நீராமஜயம்-இரண்டில் எது சரி? பூரீராமஜயம் என்பதே சரி. -