பக்கம்:விடையவன் விடைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விடையவன் விடைகள்

189. பவாகி, பவானி-இவற்றில் எது சரி ?

இரண்டும் சரியே. அது வடசொல்லாதலின் அதிலுள்ள படியே பவாநி என்று எழுதலாம்; தமிழில் வழங்குவதனல் தமிழுக்குரிய சிறப்பெழுத்தையிட்டுப் பவானி என்றும் எழுத லாம், - .

190. கொடி பற்றிப் படரும் கொம்பு கொளுகொம்ப்ா, கொழுகொம்பா? மேற்கோள் தருக.

"தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடி போல் என்பது கந்தரலங்காரம், கொழுகொம்பு என்பதே சரி. கொள்கொம்பு என்றும் வழங்கும்; கொள்கொம் பொடியக் கொடிவீழ்ந் ததுபோல் என்பது கம்ப ராமா யணம். - . * , .

191. கோயம்புத்தூர், கோயமுத்துர் - இவற்றில் எது

·莎fl?。 - . . . . -

கோவன் என்பவன் அமைத்த புதிய ஊராதலின் கோவன் புத்துார் என்று தோன்றி நாளடைவில் கோயன் புத்துரர், கோயம்புத்துர் என்று மாறியது. கோசர்கள் என்பவர்கள் அமைத்த புத்துர் ஆதலின் கோசன் புத்துார் என்று இருந்து பிறகு கோயம்புத்துர் என்று மாறியது என்றும் சொல்வர். எந்த வகையிலும் கோயம்புத்துரர் என்று வழங்குவதே சிறப்பு. ... . . . . . . . .

192. வேட்டகத்துக்குப் போயிருக்கிருன் என்பதில் வேட்டகம் என்ற சொல்லப் பிரித்து எழுதி விளக்கம் சொல்ல வேண்டுகிறேன். -

வேட்ட அகம் என்னும் சொற்கள் இணைந்து வேட்டகம் என்ருயின. வேட்டல் என்பது மணம் செய்துகொள்ளுதலைக் குறிக்கும். திருமணம் செய்துகொண்ட மாமனர் வீடு என்ற பொருள் அமைந்தது. - - ". . . . . . ‘. . . .