பக்கம்:விடையவன் விடைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விடையவன் விடைகள்

197 மகடூஉ முன்னிலை என்பது என்ன?

மகடூஉ என்பதற்குப் பெண் என்று பொருள். புலவர்கள் ஒன்றைச் சொல்லும்போது ஒரு பெண்ணை நோ க் கி ச் சொல்வதுபோலப் பாடுவது வழக்கம். அப்போது அந்தப் பெண்ணை விளிப்பார்கள். அதை மகடுஉ முன்னிலை என்று சொல்வார்கள். நீதி நூல்களிலும் யாப்பருங்கலக் காரிகை யிலும் மகடூஉ முன் னி லே மிகுதியாக வரும். ஆடவரை முன்னிலைப் படுத்திப்பாடுவது. ஆடுஉ முன்னிலை.

. 198. செங்கோட்டியாழ் என்பதற்கும் திருச்செங் கோட்டுக்கும். ஏதேனும் தொடர்பு உண்டா? * . . .

கோடு என்பது யாழின் தண்டுக்குப் பெயர். வளையாமல் நேரான கோட்டையுடைய யாழுக்கு அப்பெயர் அமைந்தது. திருச்செங்கோட்டுக்கும். அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

199. கண்ணிரும் கம்பலையுமாக நின்றன் என்பதில் வரும் கம்பலை என்பதன் பொருள் என்ன? -

கம்பலை என்பதற்கு நடுக்கம் என்பது ஒரு பொருள். ஓசை என்னும் ஒரு பொருள் உண்டு. அழுகையும் கூச்சலு மாக நிற்றலைக் குறிப்பதல்ை கம்பலே என்பதற்கு ஒசை என்று பொருள் கொள்வது சிறப்பு: வம்ப மாக்கள் கம்பலை மூதுர் என்று மணிமேகலை அடியில் அப்பொருளில் வருவது காண்க.

200. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்பன தியாகையர வர்களுக்கு முன் இல்லை; ஆழ்வார் நாயன்மார் பாடல்களில் கிச்

சயமாக இல்லை, சரியா?

சரியே பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற மூன்றுக் கும் இப்போது ஏற்படுத்திக்கொண்ட தனித் தமிழ்ப்பெயர் அவை. பல்லவி முதலிய உறுப்புக்களையுடைய கீர்த்தனங் களே முதலில் உண்டாக்கியவர் புரந்தரதாசர்.