பக்கம்:விடையவன் விடைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 49.

201. துஷ்ட சதுஷ்டயம் என்ற தொடருக்குப் பொருள் என்ன ?

நான்கு துஷ்டர்கள் சேர்ந்த குழு என்று பொருள். பாரதத்தில் வரும் துரியோதனன், து ச் சா த ன ன், சகுனி, கர்ணன் என்னும் நால்வரையும் இந்தத் தொடரால் குறிப் பது வழக்கம்.

202. வடக்கனந்தல், கனகனந்தல், நரியந்தல் என்ருல் என்ன?

அந்தல் என்று வழங்கிலுைம் அது ஏந்தல் என்பதன் திரிபு. வடக்க்னேந்தல், கனகனேந்தல், நரியேந்தல் என்ப வையே சரியான பெயர்கள். ஏந்தல் என்பது ஏரிக்குப் பெயர். ஏரிக்கு அருகில் ஊர் இருப்பதளுல் அந்தப் பெயர்கள் வந்தன. மழவராயனேந்தல், சொக்கனேந்தல் என்று வழங் கும் பெயர்களையும் காண்க.

203. கண்ணுள் வினைஞர் என்ற பெயர் எவருக்கு உரியது:

ஒவியர்களின் பெயர். தம்முடைய ஒவியங்களை நம் கண் னில் நிற்கும்படி செய்வதனால் அப்பெயர் வந்தது.

204. அகராதி என்ற பெயர் எப்படி உருவாயிற்று ?

அகாராதி கடிகாராந்தம் என்பது வடமொழி வழக்கு. - அகரம் முதல் கடிகாரம் வரையில் என்பது பொருள். அதுவே அகராதி என்று வந்தது. அகரம் முதல் வரிசையாக உள்ள எழுத்துக்களை முதலாகவுடைய சொற்களின் தொகுப்புக்கு அகராதி என்ற பெயர் வருகிறது. -

205. வெண்பொற் காசுகள் என்பதன் சரியான பொருளை விளக்க வேண்டுகிறேன். * . ; -"-w

வெள்ளியாலான காசுகள் என்பது பொருள்; வெண் பொன்-வெள்ளி. ரூபாயை இப்போது இவ்வாறு வழங்கு கிருர்கள். - - - -