பக்கம்:விடையவன் விடைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விடையவன் விடைகள்

206. நந்தனர் சரித்திரத்தை ஒரு பாகவதர் கதாகாலட் சேபமாகச் செய்தார். அதை ஹரிகதை என்று விளம்பரப்படுத் தினர்கள். சிவபக்தர் கதை எப்படி ஹரிகதை ஆகும் ?

நந்தனர் சரித்திரம் சிவகதை. கதாகாலட்சேபங்களில் சிவகதை, ஹரிகதை என்று இரு வேறு பிரிவு உண்டு. இப் போது தவருக எல்லாவற்றையும் ஹரிகதை என்று சொல் கிருர்கள்.

207. மஹிள ஸ்மாஜம் என்பதை மகளிர் கழகம் என்று மொழிபெயர்த்திருக்கிருர்கள். அப்படியானல் மஹிளா என்பதே மகளிர் என்று ஆயிற்ரு ? .

மக, மகன், மகள் என்று தமிழில் ஒரு வேர்ச் சொல்லி விருந்து பல சொற்கள் வந்துள்ளன. மகள் என்பது பன்மை யில் மகளிர் என்று வந்தது. மஹிளா என்பதற்கும் மகளிர் என்பதற்கும் சொல்லால் எந்தத் தொடர்பும் இல்லை.

208. தேவகுசுமம் என்பது என்ன ? கிராம்புக்குப் பெயர்.

209. மைக்கா நாள் என்று அடுத்த நாளைக் குறிப்பிடு கிருர்களே அது எப்படி வந்தது? - ... .

மற்ரும் நாள் என்பதன் திரிபு மற்று ஆம் நாள் என்பதே - " - . ... ’’ .! بُلائے۔

210. அப்பழுக்கு என்கிருேமே, இதில் அப்பு என்பதன் பொருள் யாது ? .

. அப்பு என்பது அப்பிக் கொண்டது என்ற பொருள் தரும்; இயல்பாக உடம்பில் உள்ளது அழுக்கு; அழுக்குள்ள பொருளைச் சார்ந்ததளுல் உண்டானது அப்பு. ‘. . . . . . . .