பக்கம்:விடையவன் விடைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 51.

21 1. கடிகாரம் என்பது எந்த மொழிச் சொல் ? கடிகாஹாரம் என்ற வடமொழித் தொடரின் திரிபு:

212. பஞ்சாங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன ?

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்தையும் தெரியப்படுத்துவதனால் அப்பெயர் வந்தது.

213. தேரை மோந்த தேங்காய்-இத் தொடரின்பொருளை விளக்குக.

தேங்காயின் உள்ளிடெல்லாம் இல்லாமல் போக்கும். நோய் ஒன்றுக்குத் தேரை என்று பெயர். அது சார்ந்த தேங்காயில் உள்ளே ஏதுமில்லாமல் இருக்கும் என்பதை அத். தொடர் குறிக்கிறது. . -

214. அவள் எவனேயும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை என் பதில் வரும் ஏறு என்பது எதைக் குறிக்கிறது

ஏற எடுத்துப் பார்த்தல் என்று பிரிக்கவேண்டும். தலை எடுத்துப் பார்த்தலேயே அது குறிக்கிறது. ஏற இறங்கப் பார்த்தல் என்று கூறும்போதும் ஏறப் பார்த்தல் வரு

215. சங்கின் ஒரு வகைக்கு வலம்புரி என்று பேர் கூறு: கிருர்கள். இங்கே புரி என்பதற்குப் பொருள் என்ன? வலம்புரி விநாயகர் என் பதில் புரி என்பதற்கு என்ன பொருள் ? . . . . . . . .

புரி என்பது முறுக்கும் பொருளுக்கும் சுழிக்கும். பொருளுக்கும் வரும் பெயர். சில சங்குகள் வலமாகச் சுழிந்திருப்பதல்ை வலம்புரிச் சங்குகள் என்ற பெயர் பெற்றன. சில விநாயகர் உருவங்க்ளில் துதிக்கை வலம்