பக்கம்:விடையவன் விடைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv

'அது கம்பர் பாட்டு அல்ல; ஒரு தனிப்பாடல்.’

அப்படியா? பலபேர் அதைக் கம்ப ராமாயணப் பாடல் என்று பேசியிருக்கிருர்களே!”

- எத்தனை Guri சொன்னல் என்ன ? உண்மை மாறு படாதே!”

ஒரு தமிழ்ப் பேராசிரியர் கேட்கிருர் :

'அடிக்கடி உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்று சொல்கிருேம்; அது எந்த நூலில் இருக்கிறதென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா? "

சேந்தன் திவாகரத்தில் வருகிறது.”

இப்படி அடிக்கடி அலுவலகத்தில் இருப்பவர்களும், இலக்கிய மன்றங்களில் உள்ளவர்களும், மாளுக்கர்களும், சினிமாத்துறையில் உள்ளவர்களும் டெலிபோனிலும் நேரி லும் கடிதமூலமாகவும் பல ஐயங்களே என்னிடம் கேட்ப துண்டு. நான் என்ன முற்றறிவுடையவன: எனக்குத் தெரிந் தவற்றை விளக்குவேன். இப்படி அடிக்கடி கேள்விகள் வருவதல்ை, கலைமகளில் ஒரு கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்க லாம் என்று தோன்றியது. பெரும்பாலும் சினிமாத்துறை சம்பந்தமான கேள்வி பதில்களே பத்திரிகைகளில் வருகின் றன. இலக்கியம், சமயம் சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கலாம் என்று தீர்மானித்து, இது பதில் என்ற பகுதியை ஆரம்பித்தேன். விடையவன்' என்ற புனைபெயரில் கேள்விகளுக்கு விடை அளித்து வந்தேன். சில மாதங்கள் அந்தப் பகுதியை வெளியிடாமல் நிறுத்தினேன். பலர் ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டார்கள். மறுபடியும் இதோ விடை’ என்ற தலைப்பில் அந்தப் பகுதியைத் தொடங்கிச் சில காலம் வெளியிட்டு வந்தேன். - - - - -

அந்தப் பகுதியில் வெளியான விடைகள் பல காலமாக உள்ள ஐயங்களைப் போக்குகின்றன என்றும், அவற்றைத் தொகுத்து வெளியிட்டால் பலருக்கும் பயனுண்டாகும்