பக்கம்:விடையவன் விடைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 55

227. நூலும் கோலும் குடையும் கரகமும் என்பதில் கரகம் என்ற சொல்லின் பொருள் யாது ? - .

கமண்டலம் என்பது பொருள்; குண்டிகை என்றும் சொல்வர். - -

228. காவடிச் சிந்தில் முதற் பாட்டில், திருவுற் றிலகு கங்கை வரையில் புகழ் மிகுந்து' என்று வருகிறது. இமயம் வரை யில் என்று கூருமல் கங்கை வரையில் என்று கூறியதில் என்ன சிறப்பு இருக்கிறது ?

அந்தப் பாடம் தவறு. திருவுற்றிலகு கங்க வரையிற் புகழ்மிகுந்து' என்று இருக்க வேண்டும். கங்கவரை என்பது கழுகு மலையின் பெயர். கங்கம்.கழுகு. காவடிச் சிந்து கழுகு மலையில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பாடிய நூல்.

229. சாதி யிரண்டொழிய வேறில்லை என்ற பாட்டில், பட்டாங்கி லுள்ள படி என்று வருகிறது; பட்டாங்கு என்பதற் குப் பொருள் என்ன ? -

பட்டாங்கு என்பது உண்மை என்ற பொருளையுடையது. இங்கே உண்மை நூலைக் குறித்து நின்றது.

230. அற்ம் செய விரும்பு என்பதன் சரியான பொருள் யாது? . . . - தர்மம் செய்ய விரும்பு என்பதே பொருள். அறம் என் பது ஈகைமட்டும் அன்று. மனிதன் செய்யத் தகுவன என்று விதிக்கப்பட்டன யாவும் அறம். -

231. திருவாசகத்தில், உற்றரை யான் வேண்டேன் என்று தொடங்கும் பாடலில், கற்பனவும் இனி அமையும் என்று வருகிறதே. அதன் பொருள் என்ன ? - -

கற்பவை இனிப் போதும் என்பது பொருள்.