பக்கம்:விடையவன் விடைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'54 விடையவன் விடைகள்

வடக்கே சம்புமா முனிவன் ஒரு யாகம் செய்ய, அந்த யாக குண்டத்திலிருந்து தோன்றியவனே முதல்வளுகப் பெற்றது இருங்கோ வேள் பிறந்த குடி. அந்த முனிவனையே

இந்த அடி சுட்டுகிறது. .

224. தொழுனை ய | ற் றி ல் தூமணி வண்ணனை, விழுமம் தீர்த்த விளக்குக்கொல்-சிலம்பில் வரும் வரிகளில் குறிப்பிடப்பட்டவர்கள் யார் யார் ? வரலாறு யாது ?

யமுனே ஆற்றில் மணிவண்ணணுகிய கண்ணனுடைய துன்பத்தைத் தீர்த்த நப்பின்னைப் பிராட்டியோ’ என்று ஆய்மகளிர் கூறுவதாக அமைந்த பகுதி இது. கண்ணன் நப்பின்னையால் காதலின்பம் நுகர் ந் த வரலாற்றைக் குறிப்பது இது. - - ... --

225. நற்றிணை 328-ஆம் செய்யுளில், எண்பிழி கெய் யொடு வெண்கிழி வேண்டாது' என வருகிறது. விளக்க வேண்டும். -

விறலி ஆடுவதற்கு முன் எண்ணெய் பெற்றுத் தலையை வாரிக்கொண்டு வெள்ளைத்துகில் .ெ ப று வ து வ ழ க் கம், அவற்றைப் பெருமலே அவள் ஆடுகிமுள் என்று இத்தப் பாட்டில் வருகிறது. எண் பிழி நெய்.எள்ளைப் பிழிந் தெடுத்த எண்ணெய்; எண்-எள்; வெண்கிழி-வெள்ளைத் துகில். -

226. திருக்குறளில் மருந்தென்னும் அதிகாரத்தில் இரண்டாம் குறள் உரையில், குறிகளாவன யாக்கையின்

நொய்ம்மை, தேக்கின் தூய்மை... முதலிய விளக்கங்கள் வருகின்றன. இவற்றுள் தேக்கு என்பது யாது ? -

ஏப்பத்தைக் குறிப்பது. தூய்மையான ஏப்பமாக இருந் தால் அது நோயின்மையைப் புலப்படுத்தும்.