பக்கம்:விடையவன் விடைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 53.

கோடி என்பது முனை என்னும் பொருளையுடையது. ஒன்றன் இயல்பைத் தெரிந்துகொள்ளச் சிறிதளவு குறிப் பாகக் காட்டுவதைக் கோடி காட்டுதல் என்று சொல். கிருர்கள். -

221. கட்டிக் கரும்பு என்று வழங்குவது எதல்ை ?

கட்டி என்பது கற்கண்டுக்குப் பெயர் சர்க்கரைக்கட்டி என்றும் சொல்வர். கற்கண்டு உண்டாக்குவதற்கு ஏற்ற உயர்ந்த சாதிக் கரும்பைக் கட்டிக் கரும்பு என்று சொல்லி வந்தார்கள். -

222. இல்லவே இல்லை என்று சொல்லுகிருேமே, இது எப்படி வந்தது ? இவ்வாறு எழுதுவது பிழையா ? “. . . .

அல்லவே அல்ல என்று சொல்லுவதைப் பார்த்து இல்லவே இல்லை என்று வந்தது. இப்படி ஒன்றைப் பார்த்து அது போன்றதாக எண்ணித் தவருகப் பிரயோகம் செய் 616 og Split-samle sugp (Error of Analogy) Grgir pi giñistavš தில் கூறுவர். தைலாபிஷேகம் என்று சொல்வதைப் பார்த்துப் பாலாபிஷேகம் என்று சொல்வதைப் போன்றது இது. முன்னது இலக்கணப்படி சரி. பின்னது தவறு. ஆளுலும் பலகாலமாக வழக்கில் வந்துவிட்டால் அவற்றைப் புலவர்கள் எடுத்து ஆள்வார்கள். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புவது மரபு. ஆகவே, இலக்கியத்தில் ஏறிய பிறகு அதைச் சரியென்றே கொள்ள வேணடும், அந்த வகை. யில் இல்லவே இல்லை என்பது இல்லை என்பதை வற்புறுத்தும் பொருளில் வழக்கில் மிகுதியாக வ்ழங்கி நிலைத்துவிட்டமை. யால், அப்படி எழுதுவது தவறு அன்று.

223. பாரி மகளிரை இருங்கே வேளின்பாற்படுத்தும் பொருட்டுக் கபிலர் பாடிய பாடல் ஒன்றில், வடபால் முனிவன் தடவினுள் தோன்றி என்று வருகிறது. அதன் விளக்கம் யாது ? " . . .