பக்கம்:விடையவன் விடைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் • 57

வர்களின் ஆற்றலுக்கு இந் தி ன எடுத்துக்காட்டாகச் சொல்லியிருப்பது எவ்வாறு பொருந்தும் ?

ஐந்து அவித்தவனகிய கெளதம முனிவரால் சாபம் பெற்றவன் இந்திரன். சாபம் பெற்று ஐந்தவித்தானுடைய ஆற்றலைத் தெரிந்துகொள்ளச் செய்தானகலின் இவ்வாறு கூறினர். தான் ஐந்து அவியாது சாபம் எய்திநின்று, அவித் தானது ஆற்றல் உணர்த்தினைகலின் இந்திரனே சாலும் கரி என்ருர்’ என்று இதைப் பரிமேலழகர் விளக்கியிருக்கிரு.ர்.

236. புலேயன் எறிந்த பூசற் றண்ணுமை, ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப' என்ற தொடரின் பொருளையும்,எந்த நூலில் வருவது என்பதையும் அறிவிக்க வேண்டும்.

இந்தச் செய்யுட்பகுதி எந்த நூலில் இருக்கிறதென்று தெரியவில்லை. பல உரையாசிரியர்கள் ஒருமை பன்மை மயக்கத்துக்கு இதை உதாரணம் காட்டுகிருர்கள். ஏவல் இளையர் தாயர் வயிறு என்று இருக்க வேண்டுவது தாய் என "இருப்பதனால் இதனைக் காட்டுகிரு.ர்கள். போர் தொடங்கு வதற்கு முன்பு, புலேயன் அடித்த போரைக் குறிக்கும் முரசொலியினல், அம்பிலே வன்மையுடைய இளைய வீரர்களின் தாய்மார்களின் வயிறு பொரும'என்பது பொருள். கரிப்பு - பொருமல். . -

237. எண்ணிய சகாத்தம் எண்ணுாற்

றேழின்மேல் சடையன் வாழ்வு கண்ணிய வெண்ணெய் நல்லூர்

தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை

பங்குனி உத்தரத்தில் கண்ணிய அரங்கர் முன்னே

கவியரங் கேற்றி ேைன' 5-سسianLته