பக்கம்:விடையவன் விடைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விடையவன் விடைகள்

என்ற பாடலை இயற்றியவர் யார் ? எண்ணிய சகாத்தம் எண்ணுற்றேழு என்பதன் பொருள் என்ன ?

இப்பாடலைச் செய்தவர் யாரென்று தெரியவில்லை. சாலிவாகன சகாப்தம் 807இன் மேல் என்பது ஒரு பொருள். எண்ணுகிற நூற்றேழின் மேல் என்று கொண்டு 1107இன் மேல் என்பது ஒரு பொருள். ஆயிரத்துக்கு மேல் எண்ணு கின்ற என்று வருவித்துப் பொருள் கொள்ள வேண்டும்.

238. இடைக்காடர் ஊசிமுறியில், ஆற்றங் கரையின் அருகிருக்கு மாமரத்தில் காக்கை யிருந்து கஃறென்னக் - காக்கைதனை எய்யக்கோல் இல்லாமல் . . . என்ருனே வையக்கோ ரிைன் மகன்’ என்று வரும் பாடலில் மூன்ருவது அடியில் மூன்று பூஜ்யத்துக்கு விளக்கம் என்ன ?

அங்கே இச்இச்இச் சென்றனே என்று சில பதிப்புக்

களில் காணப்படும். காச்கையை ஒட்டும் ஒலியைக் குறிக்கும் இடம் அது. அதை அப்படியே எழுத்தில் எழுத முடியாது. அதல்ைதான் இந்தப் பாட்டு எழுத்தாணியினல் எழுத முடியாத ஊசிமுறிப்பாட்டாயிற்று.

239. விபீஷணன் இராமனை முதலில் தரிசித்தபோது, கார்முகில் கமலம் பூத்த தன்றிவன் கண்ணன் கொல்லாம்: என்று கூறுவதாகக் கம்பன் பாடுகிறன். கண்ணன் என்பது கிருஷ்ணனைக் குறிக்கும் பெயர் அல்லவா ? இராமன் காலத்தில் கிருஷ்ணனச் சொல்வது காலவழுவாகாதா ? - .

கண்ணன் என்பது கரிய திருமால் என்ற பொருளை யுடையது. கண்ணேப் போன்ற நாராயணன் என்றும்