பக்கம்:விடையவன் விடைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விடையவன் விடைகள்

முனிவரையும் குறிப்பது. இப்பழமொழியே பாண்டியில் இரண்டும் ஆண்டியில் இரண்டும் என்றும் வேறுபட்டு வழங்கும்.

286, பதினறும் பெற்றுப் பெரு வாழ்வு :வாழ்க!” என்று வாழ்த்துகிருர்களே பதினறு குழந்தைகள் என்பது பொருளா?

பதினறு வகைப் பேறுகளைக் குறிக்கும். புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகியவை அவை.

287. கொன்றல் பாவம் தின்ருல் போச்சு-இதன் உட்கருத்து என்ன ?

கொலை செய்த பாவத்துக்குக் கழுவாயாகப் பலருக்கு உணவு அளிக்க வேண்டும் என்பது கருத்தாக இருக்கலாம்.

288. முட்டாளுக்கு மோர் சாதம் என்னும் பழமொழி யின் கருத்து யாது ?

முட்டாளுக்குச் சுவையுள்ள உணவு கொடுத்து உபசாரம் செய்ய் வேண்டியதில்லை; அவன் ருசி பார்த்து உண்ணமாட் டான். பசியாற உணவு அளித்தால் போதும். வெறும் மோர் சாதம் படைத்தாலே போதுமானது என்பது கருத்து.

289. தமிழுக்கு முகம் இல்லை; வடமொழிக்கு வாய் இல்லை என்கிருர்களே. இதன் பொருள் என்ன ?

முகம் என்பது வடசொல். தமிழில் நெற்றி, தலை, வாய் முதலிய உறுப்புக்களுக்குரிய பெயர் இருப்பினும் முகம் என்பதைக் குறிக்கத் தனிச் சொல் இல்லை. வட மொழியில்