பக்கம்:விடையவன் விடைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 73

ஆளுக்கு ஏற்றபடி வேஷம் போடுகிறவனைக் குறிக்க வந்தது அந்தப் பழமொழி. ஆண்டி சைவன்; அவனேக் கண்டால் அவன் மனம் உவக்கும்படி தன் பெயரை லிங்கன் என்று சைவப் பேராகச் சொல்வான். தாதன் என்பவன் வைணவத் தொண்டன்; அவனைக் கண்டால் தன் பெயர் வைணவப் பெயராகிய ரங்கன் என்பான் என்பது சொற் பொருள். -

283. 'ஆட்டுக்கு வால் அளந்துதான் வைத்திருக்கிறது'. என்ற பழமொழியின் கருத்து யாது? .

இறைவன் அவனவனுக்கு, ஏற்றபடி கருவிகளை அமைப் பான் என்ற கருத்தில் வழங்குவது. ஆடும் மாடும் இனமாக இருப்பவை: மாட்டுக்கு வால் நீளம்; ஆட்டுக்குக் குட்டை. பல வேலிகளில் புகுந்து மேயும் இயல்புடைய ஆட்டுக்குவால் நீளமாக இருந்தால் அது எங்கேனும் மாட்டிக் கொள்ளுமாத லால் இயற்கையில் அதன் வால் சிறியதாக அமைந்திருக் கிறது. - -

284. கறிவேப்பிலக் கொழுந்து போல ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்கிருர்களே, அதன் விளக்கம் என்ன? -

கறிவேப்பிலச் செடி எளிதில் முளைத்து வளர்வதில்லை; அதனல் அதை உவமை சொல்லும் வழக்கம் உண்டாயிற்று.

285. பாண்டியில் இரண்டும் பட்டியில் இரண்டும் என்ற பழமொழியின் விளக்கம் பாது?

பாண்டியில் இரண்டும் பட்டரில் இரண்டும்’ என்பதே சரியான உருவம். பாண்டியில் இரண்டும் என்பது அதிவீர ராம பாண்டியரையும், அவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியரையும் குறிப்பது, பட்டரில் இரண்டு என்பது சிவஞான முனிவரையும் அவர் மாணக்கராகிய கச்சியப்ப

விடை-6 . . . -