பக்கம்:விடையவன் விடைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T2 விடையவன் விடைகள்

திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் முருக்க் கடவுளே, வெம்மையான உடம்பு உயிரின்றிச் சுக்குப்போல் உலர்ந்து பிணமான பிறகு வெந்த அயமாகிய அய பஸ்மத்தால் ஆகும் காரியம் என்ன ? இந்த உலகத்தில் இந்தப் பயனில்லாத பண்டத்தைச் சுமையாக யார் சுமந்துகொண்டிருப்பார்? தேவரீர் என்றும் அழியாத சிறப்பையுடைய மோட்ச வீட்டை அருளினால் இந்தப் பெரிய உடம்பை நான் விரும்ப மாட்டேன்.

279. "எத்திசையு மேபரவு தக்களு சலமுனி எதிர்த்தபா வலர்குடாரி என்ற அருணு சலக் கவிராயர் சீட்டுக் கவியில் வரும் தக்களுசல முனி யார்?

தென்மலையாகிய பொதிய மலையில் இருந்த அகத்திய முனிவர். தமிழ்ப் பெரும் புலவர் என்பதைக் குறிக்கத் தம்மை அவ்வாறு சொல்லிக்கொண்டார்.

280. அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி- பொருள் வேண்டும். - .

எதலுைம் குலையாத பாவங்களே அறுப்பவனே, உனக்கு வணக்கம்’ என்பது பொருள்.

281. பிரம் வணிற் பாரந் தாங்கும்.இதன் பொருள் என்ன? -

தாய்ப்பாலே விரும்பி உண்டால் அந்தக் குழந்தை பிற். காலத்தில் கனமான சுமையையும் பொறுப்பையும் தாங்கு வான் என்பது பொருள். பீரம்-தாய்ப்பால்,

282 ஆண்டியைக் கண்டால் லிங்கன் தாதனக் கண்டால் ரங்கன் என்ற பழமொழியின் பொருள் என்ன?