பக்கம்:விடையவன் விடைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 71

பாட்டின் முதலில் உள்ள வாமாதுரபோகே என்ற ஐந்து எழுத்துக்களோடும் தனித் தனியே ஒவ்வொரு துவை யும் சேர்த்து, அப்படி வரும் சொல்லோடு நடித்தவர் முதலிய ஐந்து சொற்களையும் இணைத்துப் பொருள் கொள்வதுதான் முறை. இது நிரனிறை என்னும் அலங்காரம், முதல் அடியில் வந்தது எழுத்து நிரனிறை. -

276. அருட்பிரகாச வள்ளலாரின், மாற்றறியாத செழும் பசும் பொன்னே எனத் தொடங்கும் பாட்டில், விச்சையில் வல்லவர் மெச்சும் விருந்தே என்று வருகிறது. விச்சை என்பதன் பொருள் என்ன?

விச்சை என்பது வித்தை என்பதன் திரிபு. பல வகை யான சித்தி முதலியவற்றை விச்சை என்பதல்ை குறிப்பது வழக்கம். - .

277, மான்றிருண்ட போழ்தில் வழங்கல் பெரிதின்ன? என்ற இன்ன நாற்பதில் வரும் பகுதிக்குப் பொருள் யாது? வழங்கல் என்ற சொல்லுக்குச் செல்லுதல் என்பது பொருங் துமா ? கொடுத்தல் என்று கொள்ளுவதால் ஏற்படும் தவறு என்ன? -

மயங்கி இருண்ட பொழுதில் ஒளியும் துணையும் இன்றி நடந்து செல்லுதல் மிகவும் துன்பம் தருவது என்று பொருள் கொள்ளவேண்டும். வழங்குதல் என்பதற்கு மாவழங்கு சுரம்’ என்பதில் வருவதுபோலச் செல்லுதல் என்னும் பொரு ளும் உண்டு. கொடுத்தல் என்னும் பொருள் இந்த இடத் தில் பொருந்தவில்லை. -

278, வெங்காயம் சுக்கானல் வெந்தயத்தால் ஆவ தென்ன, இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத, சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம், ஏரகத்துச் செட்டியா ரே. இதற்குப் பொருள் தருக.