பக்கம்:விடையவன் விடைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விடையவன் விடைகள்

273. சென்னிமலை வேலவர்க்குச் சேர்ந்தகொம்பி ரண்டுண்டு, கன்னிகுற வள்ளிக்குக் காலில்லை- முன்னமே, ஆட்டுக்குக் கொம்பில்லை ஆனைக்குக் காலில்லை, பாட்டுக்குள் ஆராய்ந்து பார்-இந்தப் பாட்டு எதில் உள்ளது? பொருள் யாது? - - .

எழுத்தின் வடிவத்தைக் கொண்டு பாடிய தனிப்பாடல் இது. சென்னிமலை வேலவர் என்ற பெயரில் செ. வே என்ற எழுத்துக்களில் கொம்புகள் இருக்கின்றன; அந்தப் பெயரில் இரண்டு கொம்புகளைக் காணலாம். இப்படியே வள்ளி என்று எழுதினால் கால் வாங்கும் எழுத்து இல்லை. ஆடு என்று எழுதி ல்ை அதில் கொம்புள்ள எழுத்து இல்லே. ஆனை என்பதில் கால் உள்ள எழுத்து இல்லை.

274. சிறுத்தொண்டர், மூவினம் உடையோம் என்று கூறியதாகப் பெரிய புராணம் சொல்கிறது; மூவினம் என்பன யாவை? . ... . . . . .

ஆடு, பசுமாடு, எருமை என்பவை: இவற்றை முந்நிரை என்றும் கூறுவதுண்டு. - - ❖፡ ኍ

275. அருளுசலக் கவிராயர் பாடியதாகப் பின் வரும் பாடலைத் தனிப்பாடல் திரட்டில் கண்டேன்.

வாமாது போகே மனமே துதுதுதுது

ஆமா பசுமாதை அத்தனர்-தாமாய் நடித்தவர் பாகர் நடந்தவர் வேணி முடித்தவர் கங்கணர்கேண் மோ.”

வாது நடித்தவர், மாதுபாகர், தூது நடந்தவர், போது வேணி முடித்தவர், கேது கங்கணர் என்று கூட்டிப் பொருள் எழுதியிருக்கிருர்கள். முதலடியில் உள்ள ஐந்து துக்களுக்கும் தனியே பொருள் உண்டா? அவற்றை இந்தப் பாப்டிலுள்ள வேறு சொற்களுடன் இணைத்துப் பொருள் கொள்ளலாமா?