பக்கம்:விடையவன் விடைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 69.

கேட்டு அறிவது அரசர் க்டமை. அதையே இத் தொடர் குறிக்கிறது. -

272, ஈழநாட்டுக் காப்பியமான் இரகுவம்சம் என்ற நூலில் கீழ்க்கண்ட பாடல் இருப்பதாக அறிகிறேன். இதற்கு, விளக்கம் தர வேண்டுகிறேன்:

'இட்ட மெத்திய வெய்யவர் இடுக்கண்வக் திறுத்தால்

முட்ட வத்தலைப் பகைவரா குவரென முன்னேர்

பட்டு ரைத்தன காட்டுமா பானுவாற் பரியும்

கட்ட கட்டலைக் கொட்டைவான் சரோருகக் . . .

. களையே.

சூரியனுடைய கதிரால் மலர்ச்சி பெற்று வளர்த்த தாமரை, வயலில் களைபோல முளைத்திருக்க, அதைப் பறித்துப் போட்டுவிட்டார்கள். அப்போது அதற்கு நன்மை செய்த சூரியனுடைய கதிரே வாடச் செய்கிறது. இந்தக் காட்சியை ஒரு நீதியுடன் இந்தப் பாட்டுச் சொல்கிறது. விருப்பம் மிக்க வராக இருந்த கொடியவர்கள், துன்பம் வந்து கூடினல் முழுவதும் அப்போது பகைவராய் விடுவார்கள் என்று முன் ஞேர்கள் அநுபவத்தால் அறிந்து கூறியவற்றை உண்மை என்று காட்டுவதுபோல, சூரியல்ை,களேயாகக் களையப்பட்ட, கள்ளைத் தன்னிடம் கொண்ட கர்ணிகையையுடைய சிறந்த தாமரையாகிய கண்கள் துன்பத்தை அடையும். மெத்தியமிகுதியான வெய்யவர் என்பது பொல்லாதவரென்றும்

சூரியரென்றும் இரு பொருள்பட நின்றது. இறுத்தால் -

அடைந்தால். முட்டமுற்ற. *- அத்தலை-அப்போது. பட்டுஅநுபவித்து. காட்டுமா காட்டுவது போல. பரியும் - துன் பத்தை அடையும். கட்ட-களேயாகப் பறித்த கள் த.ை கொட்டை- கர்ணிகை வான் பெருமை. சரோருகம் - தாமரை. -