பக்கம்:விடையவன் விடைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

968 - - விடையவன் விடைகள்

268. பாரத வெண்பாவில் துரியோதனன, தன்னெச்சில் தானுண்ணுத் தன்மையான்' என்று கர்ணன் கூறுவதாக வருகிறது. இதற்கு விளக்கம் என்ன? . .

இது துரியோதனனுடைய செல்வச் சிறப்பைக் குறிப்பிப் :பது. அவன்முன் வெவ்வேறு கலங்களில் வெவ்வேறு உணவுப் பண்டங்களை வைத்திருப்பார்கள். ஒரு முறை ஒரு கலத்தி லிருந்து ஒரு பிடி எடுத்து உண்டுவிட்டால் அக்கலத்திலுள் ளது அவன் எச்சிலாகி விடுகிறது. ஆகவே, அதை அப்படியே விட்டுவிட்டு வேறு கலத்திலுள்ளதை எடுத்து உண்பானம் ஒரு கலத்தில் உள்ளதை ஒரு முறையே எடுத்து உண்டான்.

269 ஆதிபகவன் என்பது கடவுளைக் குறிக்கிறதா திருவள்ளுவருடைய பெற்ருேரைக் குறிக்கிறதா? - - கடவுளையே குறிக்கிறது.

270. அகரமுத ിങ്ങഖങ്ങു ஐம்பத்தொ ரட் சரமும் என்று திருப்புகழில் வருகிறது. ஐம்பத்தொரட்சரம் என்பன

வடமொழி நெடுங்கணக்கில் உள்ள ஐம்பத்தொரட்சரங் களையே அது குறிக்கிறது. உயிர் எழுத்துக்கள் 15, பஞ்ச வருக்கம் 25, ய, ர, ல, வ, ள, ச, ஷ, ஸ, ஹ, r

என்பவை.

271. செவியிற் கண்டு கண்ணிற் கூறி. இருகிலம் புரக்கும் ஒருபெரு வேந்தன் என்ற சிதம்பர மும்மணிக் கோவை அடிகளில் வரும் செவியிற்,கண்டு என்பதன் பொருள் என்ன? செவியிற் காண்பது எங்ங்ணம்? . . . . :

காதினுல் கேட்டு அறிதல் என்பது பொருள். ஒற்றுக்களா அலும் வேறு வகைகளாலும் ஆராய்ந்து, அவர் கூறுபவற்றைக்