பக்கம்:விடையவன் விடைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் . 67

இமையைக் கொட்டும் காலத்துக்கு நிமேஷம் என்று. பெயர்; அதுதான் இப்போது ஸ்ெகண்ட் என்று சொல்லும் கால அளவு. ஒரு மாத்திரையளவு அது. அதைத்தான் நிமிஷம் என்று அருணகிரியார் குறித்தார்.

265. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும், கல்லார் அறிவிலா தார் என்ற குறளில் பல்கற்றும் கல்லார் என்ற இரண்டையும் எவ்வாறு அமைத்துப் பொருள் கொள்வது?

பல கற்றும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் அறி விலாதார் என்று வைத்துப் பொருள் செய்தால் தெளி வாகும். • 3

266. சிதம்பர சுவாமிகள் இயற்றிய மீளுட்சி அம்மை. கலிவெண்பாவில் கடைசியில், சிவலோகத்தைந்தருவே என்று. வருகிறது. ஐந்த்ரு என்பவை யாவை?

ஐந்து வகையான தேவ விருட்சங்களைக் குறிக்கிறது. அவை மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், கல்பவிருட்சம், ஹரிசந்தனம் என்பன.

267., பாரதியார் பாடிய சீட்டுக் கவி ஒன்றில், சொல். லிலே கிகளில் லாத புலவர்கிற் சூழலுற்றல், எல்லினக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ? என்று வருகிறது. எல் என்பதற்கு என்ன பொருள் கொள்ள வேண்டும்? . .

இருட்டிலிருந்து ஒளியை நோக்கிப் பாயும் விடையைப் போல என்று பொருள் கொள்வது சிறப்பு; ஆகவே, எல் என்பதற்கு ஒளி என்று பொருள் கொள்ளவேண்டும். ... ?