பக்கம்:விடையவன் விடைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விடையவன் விடைகள்

இவள் தன்னை . இவள் தமையன். என் ஐ.என் தலைவன் (காதலன்). .

261. திண்ணம் இரண்டுள்ளே சிக்க அடக்காமல், பெண்ணின்பால் ஒன்றைப் பெருக்காமல்-உண்ணுங்கால், நீர் கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம், பேருரைக்கிற் போமே பிணி. இப் பாடலை இயற்றியவர் யார் ? இதன் பொருள்

யாது ? ...’ - -

தேரையர் பாடியது என்பர். இரண்டு என்பது மலசலம். அவற்றை அடக்கக் கூடாது. பெண் போகத்தை மிகுதியாகச் செய்யக் கூடாது. ஒன்று என்பது விந்து. நீரைக் காய வைத்து, மோரை நீர்விட்டுப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்ண வேண்டும்.

262. காணி கிலம் வேண்டும் என்ற பாரதியார் பாடலில் வருகிற காணி என்பது என்ன அளவு ? அதற்கு வேறு பொருள் உண்டோ? - -

நிலத்தின் அளவைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும். காணி என்பது கிட்டத்தட்ட 1.32 ஏகரா.

263. திருப்பாவைப் பாடல் ஒன்றில் வரும், தீக்குறளைச் சென்ருேதோம் என்ற அடி எதைக் குறிக்கிறது ?

திக்குறளை சென்றேதோம் என்பது சரியான பாடம். திய கோள் சொற்களைச் சென்று சொல்லமாட்டோம்

என்பது பொருள். குறளை.புறங்கூறும் சொல். х

264. சரணகமலாலயத்தில் அரைகிமிடி കേ ു് என்று அருணகிரியார் பாடுகிருரே. அவர் காலத்தில் மணி,

நிமிஷம் என்ற கணக்கு வந்து விட்டதா?