பக்கம்:விடையவன் விடைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 81

308. எந்தப் புளுகும் கந்த புராணத்திலே’ என்ற பழமொழி வழங்குகிறதே, அது எவ்வாறு பொருந்தும்?

எந்தப் பொருளும் கந்தபுராணத்திலே என்பதுதான் அதன் சரியான உருவம், பொருளைப் புளுகாக்கினது நம் முடைய திருவாக்கு! ->

309. ஏவா மக்கள் மூவா மருந்து-இதன் பொருளை விளக்க வேண்டும். -

ஏவாமலே நாம் குறிக்கும் காரியங்களைச் செய்யும் மக்கள் முப்பை மாற்றும் மருந்தாகிய அமிர்தத்தைப் போல்பவர்கள் என்பது பொருள். -

310. களவும் கற்று மற' என்பதில் வரும் களவு என்றது எதனை? இந்தத் தொடருக்கு என்ன பொருள்?

களவு நூல் என்ற ஒன்று உண்டு, கரவடர் என்பவர் ஸ்தேய சாஸ்திரம் என்ற ஒன்றை இயற்றினராம். களவு நூல் தெரிவஞ்சனை’ என்று திருப்புகழில் வருகிறது. திருடுகிற சிேறைகள் முதலியவற்றைச் சொல்வது அது. அதையும் நாம் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும்; களவு செய்வதற்கன்று: கள்வர்களைக் கண்டு பிடித்தற்கு. மதுரைக் காஞ்சியில் மதுரை ஆாதகர்க் காவலர்கள் காவல் நூலும் களவு நூலும் அறிந்து கொண்டிருந்தார்கள் என்ற செய்தி வருகிறது. களவு நூல்க் கற்றுக்கொள்; ஆனல் களவு செய்வதை மறந்து காவல் செய்வதற்கு அந்த அறிவைப் பயன்படுத்திக்கொள்’ என்று பொருள் செய்யவேண்டும். - . -

311. ஊரில் ஒருவனே தோழன், ஆரும் அற்றதே தாரம் என்ற பழமொழிக்கு விளக்கம் தாருங்கள்.

'லர் நட்புடையவர்களாகத் தோன்றிஞலும் உண்மை யான உயிர்த் தோழன் ஒருவனே இருப்பான்; தனக்கு வேறு