பக்கம்:விடையவன் விடைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விடையவன் விடைகள் م

பற்ருே உறவோ இல்லையென்றும், தன் கணவன் ஒருவனே பற்றென்றும் எண்ணியிருப்பவளே நல்ல மனைவி. இது பொருள். . .

312. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் என்பதற்கு இரண்டு பொருள் உண்டா ? .

பொல்லாதவனுக்குச் சிறிது இடம் கொடுத்தால் அவன் மெல்ல மெல்ல வீட்டையே பற்றிக்கொள்வான் என்பது ஒரு பொருள்.

இறைவனுக்கு உள்ளத்தில் இடம் கொடுத்தால் அவன் நம் அறியாமையை எடுத்துவிடுவான் என்பது மற்ருெரு பொருள். . - .

313. சம்பந்தன் தன்னைப் பாடுவான்; சுந்தரன் பொன்னைப் பாடுவான்; அப்பன் என்னைப் பாடுவான். இந்தப் பழமொழியின் கருத்து என்ன ?

இது சிவபெருமான் சொன்னது போல அமைந்திருக்கி றது. சம்பந்தர் ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப் பாட்டிலும் தம் புகழைச் சொல்லுவார். சுந்தரர் பொன்னும் பொருளும் வேண்டுமென்று பாடுவார். அப்பர் வாக்கில் இவை இல்லை; இறைவன் துதியாகவே இருக்கும். இந்தக் கருத்தையே அந்தப் பழமொழி குறிக்கிறது. - . -

314. முக்கால் அழுகிறன்.-விளக்கம் வேண்டும்.

முணுமுணுக்கிருன் என்ற பொருளில் வழங்குகிறது. துன்பக் கண்ணிர் விடுகிருன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனந்தக் கண்ணிர் கன்னத்தில் வழியுமென்றும் துன்பக் கண்ணிர் மூக்கின் வழியே வருமென்றும் இராம கிருஷ்ண பரமஹம்சர் சொல்கிருர், .