பக்கம்:விடையவன் விடைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 83.

315. பார்ப்பானுக்கு இடம் கொடாதே என்ற பழமொழிக்குப் பொருள் என்ன ? $

அந்தணர் இடப்பக்கம் இருக் கும் படி செல்லாமல் அவ்ரை வலமாகச் செல்ல வேண்டும் என்பது பொருள். பழைய காலத்து வழக்கம் இது. பழமொழி அல்லவா ?

3 16. பிடிக்கக் குரங்காய் முடிந்தது' என்ற பழமொழிக்கு விளக்கம் தேவை. ... . .

ஏதோ ஒன்றை நினைத்து ஒரு காரியத்தைத் தொடங்க, அது விரும்பாத முறையில் முடிந்ததற்கு இந்தப் பழமொழி யைச் சொல்வார்கள். பிள்ளையார் சதுர்த்தியில் மண்ணுல் பிள்ளையாரைப்போல் வடிவம் செய்யப் போய் அது குரங்கைப் போல முடிந்தது என்பது சொற்பொருள்.

பஜனையில் விநாயகர் துதியில் .ெ தா ட ங் கி ஆஞ்ச

நேயர் துதியோடு முடிக்கும் வழக்கத்தை வேடிக்கையாகச் சுட்டுவதாகவும் கொள்ளலாம். .

317. இலை தின்னி காய் அறியான்."-இதற்கு என்ன பொருள்? .

வாழையை வளர்ப்பவர்கள் அதன் இலையை அவ்வப் போது நறுக்கிப் பயன்ப்டுத்தினல் பிறகு அதில் நல்ல காய் காய்க்காது. இந்தக் கருத்தையே அது குறிக்கிறது. . .

3.18. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.இதற்கு வழக்கமாகச் சொல்லும் பொருளல்லாமல் வேறு ஏதாவது நுட்ப மான பொருள் உண்டா ? -

சஷ்டியில் விரதம் இருந்தால் கர்ப்பப்பையில் கரு உண் டாகும் என்பது ஒரு பொருள். குழந்தை வேண்டுபவர்கள் சஷ்டிவிரதம் இருப்பது மரபு.