பக்கம்:விடையவன் விடைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 விடையவன் விடைகள்

319. அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை.-அஞ்சு என்றது எது? இரண்டு என்றது எது? -

பொதுவாக எதையேனும் ஏற்றுக்கொள்ளத் தக்கதா என்று பார்க்கும்போது அஞ்சுக்கு இரண்டு, அ த | வ து நாற்பது சதவிகிதம் சரியாக இருந்தால் குற்றம் இல்லை என் பது பொருள். கண், காது, நாக்கு, மூக்கு,தோல்என்ற ஐந்தில் கண்ணும் காதும் முக்கியமானவை; ஆதலின் அவ ற்றிற்குக் குற்றம் இல்லை என்பது ஒரு பொருள். அழகு பார்க்கும்போது இந்த ஐந்தில் முக்கும் முழியும் குற்றமில்லைஎன்பது மற்ருெ பொருள். .

320. அண்ணனுக்கு எட்டாதது தம்பிக்கு ണു് - என்ன பொருள் ?

இரண்டு உதடுகளைக் குறித்த பழமொழி இது. அண்ணன் என்பது மேலுதடு; தம்பி என்பது கீழுதடு. மேலுதடு கீழுதட் டோடு வந்து பொருந்துவதில்லை. கீழுதடே மேலுதட்டை எட்டிப்பொருந்தும். அதைக் குறிப்பது இது.

மற்முென்று : அண்ணன் என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டுவதில்லை; தம்பி என்னும்போது அவை ஒட்டும். . . . . - . х

321. கோம்பி விருத்தம் என்பது எதைப்பற்றி யார் பாடியது ? - - .

கோம்பி என்பது பச்சோந்தி. ‘striosiums (Chameleon) என்ற ஆங்கிலப் பாட்டைத் தழுவி அமரர் வெ. ப. சுப்பிர மணிய முதலியார் பாடியது. -- .

322. பாசவதைப் பரணியைப் பாடிய ஆசிரியர் யார் :