பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிஞர் வாணிதாசன் 念莎 |ரெழினெல்லா பார்ப்பதற்குமுன் கதவை மூடிக் கொண்டு அறைவிட்டுப் போகிறாள் தப்ன் தப்ன் ! இந்தப் பாழாய்ப்போன கோட்டையைப் பற்றி இன்னும் உனக்குச் சொல்லுகிறேன் கேள். இந்த ஒரு இடத்தில்தான் சற்றுப் பயமில்லாமல் பேசலாம். நிச்சயமாக இதை யாரும் கேட்கமுடியாது. எதுவேண்டுமானாலும் பேசலாம். இந்தக் கோட்டை யில் இங்குதான் எது பேசினாலும் வெளிக்குக் கேட்காதாம். யாரும் மறைந்து கேட்கமுடியாதாம், [இந்தக் கடைசி வார்த்தையை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அ ைற யி லி ரு ந் த பாத்திரங்கள் வைக்கும் சிறிய அலமாரி தன்னில் தானே சுழன்று ஒமோதேய்க்கு வழிவிட்டுத் திரும்பவும் மூடிக்கொள்கிறது. இது அவளுக்குத் தெரியாது.1 ஒமோதேய் : இந்த ஒரு இடத்தில்தான் சற்றுப் பயமில்லாமல் பேசலாம். நீச்சயமா இதை யாரும் கேட்கமுடியாது. - - - ரெழினெல் ஆ....கடவுளே! ஒமோதேய் : சத்தம் வரப்போகிறது. (தன் மேலாடை யில் மறைந்திருந்த வேனிஸ் பதின்மர் குழுவின் ஒற்றன் என்ற வி. டி. எக்ஸ். என்ற அடையாளத்தைக் காட்டுகிறான். ரெழினெல்லா அந்த அடையாளத்தை யும் ஆணையும் பயத்தோடே பார்க்கிறாள்.) - - - எங்களில் யாரையாவது ஒருவனைப் பார்த்த செய்தியை யாராக இருந்தாலும், யாருக்காகிலும் சிறு சைகைமூலம் கூடத் தெரிவித்தால் போதும். விடிந்தால், அவர்கள் உயிர் இருக்காது. இது உனக்குத் தெரியுமல்லலா. நினைவிருக்கட்டும். ரெழினெல் சேசுவே! எந்த வழியால் இவன் வந்தான். ஒமோதேய் : எந்த வழியாலுமல்ல." ரெழினெல் : சேசுவே!