பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 4s. கத்தேரினா : (கத்தேரினா கையிலிருந்த யாழ் கீழே: விழுகிறது) தெய்வமே! . ரொதோல் : மறைந்திருந்து தொடர்ந்து பாடு கிறான். . நீலவானில் கோலம் செய்யும் நிலவு நில்லா தோடல் போலே காலம் விரைந்தே ஒடும்போது கண்ணிரோடென் காதற் பாடல் ஞாலம் விழுங்கும் இருட்டில் உன்றன் நகை முகத்தைத் தழுவிடாதோ! கத்தேரினா : ரொதோல்போ! ரொதோல் : (தன்மேல் போர்வையைக் கழற்றிவைத்து விட்டு அவள் காலடியில் வந்து குந்துகிறான்) கத்தேரினா! கத்தேரினா! நீயா! நீ எப்படி இங்கு வந்தாய்? கடவுளே! உன்னைக் கண்டு மகிழ்கிறேன். இல்லை பயத்தான். சாகிறேன். எனக்காக நான் பயப்படவில்லை. ரொதோல்போ! நீ எங்கே இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியுமா? வேறு ஏதோ ஒரு அறையைப் போன்றது. இந்த அறை என்று நினைத்துக் கொண்டாயா - பாவி! சாவுக்கருகிலல்லவா நிற்கிறாய். • - - இராதோல் : கவலையில்லை. உன்னைப் பார்க்காமல், இறந்திருப்பேன். இப்பொழுதோ உன்னைக் கீன் குளிரப் பார்த்த பிறகு சாகப்போகிறேன். அவ்வளவு தானே - மகிழ்ச்சியோடு சாவேன். கத்தேரினா நல்லதே செய்தாய். ஆம். நீ வந்ததே நல்லது தான் - உன்னைப் பார்க்காமல் நானும் சாவோடுதான் போராடிக் கொண்டிருந்தேன். இதோ உன்னைக்