பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎0 விக்டர்வியுகோவின் ஆன்ழெல்லோ கண்குளிரப் பார்க்கிறேன். என் காதலே மற்றதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு மணி நேரம் உன்னோடு - பிறகு இந்தத் தளமே இடியட்டும். கவலையில்லை. ரொதோல் : கடவுள் நம்மைக் காப்பார். நமக்கென்ன பயம். கோட்டையில் யாவரும் துரங்குகின்றார்கள். ஆனால் வந்த வழியே நான் திரும்பிப் போக முடியாது. அவ்வளவுதான். - கத்தேரினா : எப்படி வந்தாய்? ரொதோல் : நான் ஒரு மனிதன் உயிரை மீட்டேன். அவன் என்னைக் கூட்டி வந்தான். நான் அதைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். அவனைப்பற்றி நீ பயப் படாதே! எனக்கு அவன் மேல் நம்பிக்கை உண்டு. கத்தேரினா : அப்படியானால் சரி-ரொதோல் போ... என் உயிரே ரொதோல் : கத்தேரினா! கத்தேரினா : எதைப்பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நான் உனக்கு - நீ எனக்குத்தான். நான் மிக மாறி இருப்பதாக உனக்குத் தோன்ற வில்லையா. காரணம் சொல்கிறேன் கேள். உன்னைப் பிரிந்த ஐந்து வாரங்களாக நான் அழுதுகொண்டே தான் இருக்கிரேன்-நீ எப்படி இருந்தாய். சிறிதாகி லும் கவலை இருந்ததா உனக்கு நம் பிரிவு உன்னை, ஒன்றும் செய்யவில்லையா? சொல் சொல்லேன்! உன் பேச்சைக் கேட்டு நீண்ட நாள் ஆகிறதே. ரொதோல் : ஆ- கத்தேரினா என் கண்ணே! உன்னைப் பிரிந்திருப்பது கண்ணில் இருட்டை வைத்துக்கொண் டிருப்பதைப் போன்றது. நீ இல்லா வேளை துடிப் பில்லாஇதயம். வீண்மீன் இல்லா இரவு. ஒவ்வொரு