பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ வினாடி பொறுங்கள். நான் ஒடிவிடமாட்டேன். அதோ அந்தச் சிலுவையின் முன் மண்டியிட ஒரே ஒரு வினாடி அருள்கூறுங்கள். (சுவற்றில் மாட்டப் பட்டிருந்த பித்தளைச் சிலுவையைக் காட்டுகிறாள்). இதோ இந்தச் சிலுவையின்முன் தயவுசெய்யுங்கள் (திஸ்பின் கண்கள் அந்தச் சிலுவையில் பதிகின்றன) என்னசொல்லுகிறீர்கள் ஒரே ஒரு வினாடி எனக்குக் கொடுங்கள் -என்மேல் நம்பிக்கை இல்லையென்றால் என் அருகிலேயே இருங்கள். என்னசொல்லுகிறீர்கள்? நான் சாகத்தான் வேண்டுமென்பது உங்கள் முடிவாக இருந்தால் நான் சாகிறேன். ஒரே ஒரு வினாடிவணங்குவதற்காக இந்த ஒரு வினாடி. (தீஸ்ப் விரைந்து அந்தச் சிலுவையைச் சுவற்றிலிருந்து எடுக்கிறாள்.) தீஸ்ப் : இது என்ன சிலுவை இது. இந்தச் சிலுவை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது. இதைக் கொடுத்தது. யார்? எப்பொழுதிருந்து நீங்கள் இதை வைத்திருக் கிறீர்கள்? கத்தேரினா என்ன? இந்தச் சிலுவையா? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்வதால் ஏற்படப்போவதென்ன? திஸ்ப் : இது எப்படி உங்களுக்குக் கிடைத்தது?சொல்லுங் கள். உடனே சொல்லுங்கள். (தீஸ்ப் எடுத்துவந்த விளக்கு எரிந்துகொண்டே இருந்தது. அந்த விளக்கின் அருகில் சிலுவையை எடுத்துக்கொண்டு போய்த் திருப்பித்திருப்பிப் பார்க்கிறாள். கத்தேரினா அதைக் கவனிக்கிறாள்) . . . . . - கத்தேரினா இதுவா- இது ஒரு கிழவி கொடுத்தாள்? அதிலே இருக்கிற அந்தப் பெயர் "தீஸ்ப்' எனக்கு அந்தப் பெயர் என்ன என்பதே தெரியாது. அந்த