பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 6 & ஏழைக் கிழவியைப் பிரேசியாவில் தூக்கிவிடக் கட்டி இழுத்துப் போனார்கள், அப்பொழுது நான் சிறுமி யாக இருந்தேன். என் தந்தையே அந்தக் கிழவிக்குத் தூக்குத் தண்டனை இட்டவர். அழுது கெஞ்சி அவளை மன்னிக்கும்படி வேண்டினேன். தந்தையாக இருந்த தால், என் அழுகையைக் கண்டு அவளை மன்னித்து விட்டார். அவள் உயிர் மீண்டது. அம்மா உங்களைக் கெஞ்சுகிறேன். என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம். அவர் என்னைக் கொன்றுவிடுவார். தயவு செய்யுங்கள். அந்தக் கிழவி-தூக்குத்தண்டனை யிலிருந்து என்னால் தப்பித்துவிடப்பட்ட கிழவி இந்த சிலுவையை எனக்குக் கொடுத்து இது உனக்கு நன்மைசெய்யும்' என்றாள். இதுதான் உண்மை. சத்தியமாகச் சொல்லுகிறேன். இந்தச் சிலுவையைப் பற்றிய செய்தி இவ்வளவுதான். இதை நீங்கள் தெரிந்துகொள்வதால் என்னபயன்? தீர்ந்தது என் வாழ்வு... - திஸ்ப் : (தனக்குள்ளே) கடவுளே! என்தாய்! (கதவு திறக்கப்படுகிறது-ஆன்ழெல்லோ படுக்கை உடை. யோடு வருகிறார்) கத்தேரினா : (அரங்கின் முன் வந்து) என் கணவன் நான் செத்தேன்! காட்சி-6 கத்தேரினா - திஸ்ப் - ஆன்ழெல்லோ ஆன்ழெல்லோ : (தீஸ்பைக் கவனியாது) என்ன இது? நீண்ட நேரமாக இங்கு ஏதோ இரைச்சல் கேட்டதே!. கத்தேரினா : ஊம். - - ஆன்ழெல் இந்த நேரம் வரையிலுமா நீ இன்னும் உறங் காமல் விழித்துக் கொண்டிருக்கிறாய்?