பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ சுவையை நான் இன்னும் உணரவில்லை. என்னைச் சாகடிக்கவேண்டாம். நான் அப்படி என்ன தவறு உங்களுக்குச் செய்துவிட்டேன். வேண்டாம் - வேண்டாம் என்னை வாழ விடுங்கள், ஆன்ழெல் : அது முடியாது. நான் சொன்னதுசொன்னதுதான்-நீ சாக வேண்டியதுதான். ஆனால் ஒரே ஒரு வழி உண்டு. கத்தேரினா : அது என்ன வழி? - ஆன்ழெல் : இந்தக் கடிதம் யார் எழுதியது அதைச் சொல்லிவிடு. அவன் யார் என்பதைக் காட்டிவிடு: போதும். நீ தப்பிக்கலாம். கத்தேரினா : கடவுளே! ஆன்ழெல் : நீ அந்த மனிதனைக் காட்டினால்போதும். அவனுக்குத் தூக்கு - உனக்கு மடம் (convent) விரைவில் எந்த முடிவுக்காவது வா. கத்தேரினா : கடவுளே! ஆன்ழெல் : என்ன, கூறமாட்டாயா? கத்தேரினா : இதோ கூறுகிறேன் அரசே! ஆன்ழெல் : ஊம். சொல் இரண்டில் ஒன்று சொல். அவன் யார் என்று சொல்லிவிடு! நீ தப்பித்துக் கொள்ளலாம், - - இருக்கிறது. அதிகக் குளிர். ஆன்ழெல் : இதோ பார். நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இன்னும் ஒரே ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. ஆம் ஒரே ஒரு மணி. நான் உன்னைத் தனியாக விடுகிறேன். இங்கு யாரும் வரமாட்டார்கள். நன்றாக எண்ணிப்பார். இதோ கடிதத்தையும் கத்தேரினா : இந்தப் பூஜை அறையில் எனக்குக் குளிராக