பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விட்டு சித்தன் விரித்த தமிழ் யிருப்பதைக் காணுமாறு அழைக்கின்றாள் யசோதைப் பிராட்டி. கண்ணன் வரலாறு முழுவதையும், திருமாலின் தீரச் செயல்களையும் ஆழ்வார் அறிந்தவராதலால் தடா நெய் உண்ணல் (4), குவலயா பீடத்தை அழித்தல் (7), கண்ணனைப் பழந்தாம்பால் கட்டுதல் (9), உடலில் பிணித்த நிலையில் மருத மரங்களை வீழ்த்துதல் (9, 10), சாடு உதைத்தது, பூதனையின் உயிர் குடித்தது (11), நேமி பும் சங்கும் நிலாவிய கைத்தலங்களைக் காட்டுதல் (12), உலகை உண்ட வரலாறு {13, 18) போன்ற செய்திகள் பாசுரங்களில் அதுசத்திக்கப்பெறுவதற்கு இதுவே காரண மாகும் என்பது உளங்கொள்ளத் தக்கது. * இறுதியாக யசோதையின் ஈடுபாடு திருக்குழலின்மீது செல்லுகின்றது. அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்தெங்கும் ஆர்ப்ப கழகன்று இனங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா கானரீரே! குவிமுலை யீர்!வந்து காண்ரே! (1.3:20) |பைம்பொன் - பசும்பொன்; கோல்.மாடுமேய்க்கும் கோல்; அம்கை-அழகிய கை; கழல்கள்-வீரக்கழல் கள்; கலந்து..சேர்ந்து; ஆர்ப்ப-ஒலிக்க; மழகன்று கள்-இளமை பொருந்திய கன்றுகள்; மறித்து. மடக்கி; குழல்கள்.திருமுடி (மயிர்)) .* கண்டவர்களின் கண்ணுக்கு அழகியதும் பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான மாடுமேய்க்கும் கோலை அழகிய கையிலே பிடித்துக்கொண்டு கானில் மேயும் கன்றுகளை மடக்கித் திரியுங்கால் கால்களிலுள்ள வீரக்கழல்களும் சதங்கைகளும் ஒன்றோடொன்று கலந்து அவன் போகும் இடம் எல்லாம் ஒலிக்கும்; அப்போது அவன் தலையில் உள்ள திருக்குழல்கள் அசைந்து அலைந்து விளங்கும்.