பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் 69 என்பது யசோதையின் அழைப்பு. மகர குண்டலங்கள் ஆடும்போது கவனித்தால் காதின் அழகு தென்படும் என்பது குறிப்பு. - திருச்செவியிலிருந்து யசோதையின் கவனம் திரு நெற்றிக்குத் தாவுகின்றது. இங்குக் கண்ணனின் சிறு குறும்பு களை நினைவூட்டுகின்றாள் யசோதை. முற்றிலும் துதையும் முன்கைமேல் பூவையும் சிற்றில் இழைத்துத் திரிதரு வோர்களை பற்றிப் பறித்துக்கொண் டோடும் பரமன்றன் கெற்றி யிருந்தவன் காணிரே! கேரிழை யீர்! வந்து காணிரே! (1.3:19} :சிற்றில்.சிறு வீடு: இழைத்து.செய்து கொண்டு; முற்றில்-சுளகு, தூதை,சிறு பானை; பூவை. நா.கணவாய்ப்புள் பறித்தல்-அபகரித்தல்.) கண்ணன் அவதரித்த பதின்மூன்று - பதினான்கு நாட் களுக்குள் ஊர்ப் பெண்களை அழைத்து உறுப்புகளின் அழகை யசோதை காட்டும் பாசுரமாக இத்திருமொழி அமைந்திருந்தாலும், பிற்கு நடைபெற்ற சிறு குறும்புகளை யெல்லாம் இந்த ஆழ்வார் அறிந்தவராதலால், அவற்றை பும் கண்ணபிரானுக்குச் சிறப்பாக இருக்குமாறு அருளிச் செய்கின்றார். சிறு பெண்கள் தெருக்களில் கொட்டப் பெற்றிருக்கும் மண்ணையும் கல்லையும் கொண்டு வீடு கட்டி விளையாடுவதைச் சிற்றில் இழைத்தல் என்பர். அதற்கு மணல் கொழிக்க சிறு முறம் வைத்துக் கொண் டிருப்பர். மணற்சோறு சமைக்கச் சிறுபானையையும் வைத்துக் கொண்டிருப்பர். அப்பெண்கள் கொஞ்சி விளை யாடும் பொருட்டுத் தங்களது முன்னங்கைமேல் நாகண வாய்ப் புள்ளையும் வைத்துக் கொண்டிருப்பர். இவற்றை யெல்லாம் வலிந்து பறித்துக் கொண்டு ஒடும் தீம்பன் கண்ணன். அப்படி இவன் ஒடும்போது ஓடுகின்ற களைப் பினால் இவனது நெற்றியில் குறுவியர்வு தோன்றி அழகா