பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விட்டு சித்தன் விரித்த தமிழ் முடிச்சோதி யாய்உனது . முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி கிேன்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும் பல்க்லனாய் நின்ம்ைபொன் கடிச்சோதி கலந்ததுவோ? திரும்ாலே க்ட்டுரையே." ‘. . . . . :முடி-தலை; அடி-திருவடி படிச்சோதி.இயற்கையான காந்தி; கடி-திருவரை. - - wo என்ற திருப்பாசுரத்தில். நின் திருமுக மண்டலத்தின் காந்தி மேல்முகமாகக் கிளர்ந்து கிரீடச் சோதியாக ஆயிற்றா?:நின்திருவடிகளின் ஒளிதான் ஆசன பதுமமாகத் தென்படுகின்றதா? நின்திருவரையின் சோதிதான் படிச் சோதி ஆடையாயும் பல்கலனாயும் கலந்ததுவோ? அடியே னுக்குத் தெரிய அருளிச் செய்யவேண்டும் என்கின்றார். ஒவ்வோரழகில் ஈடுபடுகின்ற காலத்தில் அஃதொன்றே சிறந்ததாய்த் தோன்றி நிற்கும் தன்மைய்ை இப்பாசுரத்தில் தெரிவிக்கின்றார் ஆழ்வார். இந்நிலை இராமன் மிதிலை மாநகரில் திரு உலாப் போந்தபோது அவனது திருமேனி அழகினைக் கண்ட மாதரின் நிலையை நினைவூட்டுகின்றது. தோள்கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன; தாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கைகண் டாரும் அ.தே: வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை யொத்தார்." (கமலம்-தாமரை: தாள்.திருவடி, வாள்கொண்டவாளையொத்த; ஊழ்.பெருமை; உருவு.வடிவு 9. திருவாய், 3.1:1. 10. பாலகாண், உலாவி. 19