பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் 73 ஒவ்வோர் உறுப்பையும் கண்டவர்கள் அதனதன் அழகின் மேல் வைத்த கண் வாங்கமுடியாமல் அழுந்திவிட்டார்கள். அதனதன் அழகுக்கு ஒர் எல்லை இல்லாமையாலே அதன தனினின்றும் தம் கவனத்தைப் பிறிதொன்றில் திரும்ப முடியாது அதனதன் அழகிலேயே சொக்கிவிட்டார்கள் என்பதைத் தெரிவிக்கின்றான் கம்பநாடன். பிறிதோரிடத் தில் இராமனை, - அழியா அழகுடையான்' என்று போற்றுவான். அழகின் சிரிப்பு என்ற நூலில் பாவேந்தர் நம்மை இயற்கையழகில் ஈடுபடுத்துவதை சண்டுச் சிந்தித்தல் தகும். . . . . - அழகெலாம் திரண்ட ஒரு குழந்தையைக் காணும் போது கிருஷ்ண விக்கிரகம் (விக்கிரகம்.திருமேனி) போல் இருப்பதாகக் கூறுவர் பெண்கள். கிருஷ்ணாவதார காலத்தில் யசோதைப் பிராட்டி ஊர்ப் பெண்டுகளை யெல்லாம் அழைத்துக் கண்ணபிரானுடைய திருவடிமுதல் திருமுடிவரை உள்ள உறுப்புகளின் அழகைக் காட்டுவதை அநுபவித்தோம். இந்த அநுபவத்தின் பயன்ன ஆழ்வார் தானான தன்மையில் நின்று, சுருப்பார் குழலி யாசோதைமுன் சொன்ன திருப்பாத கேசத்தைத் தென்புதுவைப் பட்டன் விருப்பால் உரைத்த இருபதோ டொன்றும் உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே. - - - (1.3:21) என்று முதல் இருபதிரிைன்றும் சந்த வேறுபாடு தோன்ற12 பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். இப்பாசுரங்களை ஓத வல்லவர்கள் எம்பெருமானை நித்தியாதுபவம் பண்ணு 11. டிெ அயோத். கங்கைப். 12. இத் திருமொழியின் முதல் இருபது பாசுரங்கள் கலிவிருத்தத்தால் ஆனவை. இறுதிப் பாசுரம் தரவுக் கொச்சகக் கலிப்பாவால் ஆனது.