பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விட்டு சித்தன் விரித்த தமிழ் வதற்குப் பாங்கான திருநாட்டில் சென்று இன்புறுவர் என்பதாக, பிள்ளைப் பெருமானின் பிறப்பைப் பாரதியார், கண்ணன் பிறந்தான்-எங்கள் கண்ணன் பிறந்தான்: - என்று குதுகலத்துடன் பேசி மகிழ்வதை ஈண்டு நாம் எண்ணி மகிழ்கின்றோம். - இக்கட்டுரையின் பிற்பகுதியில் குறிப்பிடப்பெற்ற வருணனை பிற்கால இலக்கியமாகிய பாதாதி (பன்னிரு. பாட், 50; தோன்றுவதற்கு வித்தாக அமைந்தது என்று கருதலாம். பாதாதி, பாதமாகிய ஆதியை உடையது. பாத முதலாக முடிவரையில் பாடப்பெறுவது என்பது கருத்து. இதில் 1. உள்ளங்கால், 2. அடியின் நகங்கள், 3. அடியின் விரல்கள், 4. புற அடிகள், 5. பரடுகள், 5. பாதங்கள், 7. கண்ணக் கால்கள், 8. முழந்தாள்கள், 9. தொடைகள், 10. அல்குல் (இடுப்பின் கீழ்ப்பகுதி), 11. கொப்பூழ், 12. வயிறு, 13. வயிற்றின் வரைகள், 14. இடை, 15. வயிற்றின் மயிர் ஒழுங்கு, 16. தனங்கள், 17. கைத் தகங்கள், 18, கை விரல்கள், 19. முன் கைகள், 20. உள்ளங் கைகள், 21. இரண்டு தோள்கள், 22. கழுத்து, 23. முகம், 24. பற்கள் 25. செவ்வாய், 25. மூக்கு, 27. கண்கள், 28. காதுகள், 29. புருவங்கள், 30. நெற்றி என்ற முப்பது உறுப்புகளுடன் 31. தலைமயிர், 32. கன்னமும் கூடிய 32 உறுப்புகளையும் பாதம் ஆதியாகும்படி வைத்துப் பாடப் பெறும் இலக்கியம் ஆகும். பேரிலக்கியங்களில் இவை தென்படுவதைக் காணலாம். கேசம் ஆதியாக வைத்துப் பாடப்பெறும் இலக்கியம் கேசாதிபாதம்' என்பது. ஆடவர்களைப் பாடுமிடத்து முலை (16) என்பதை நீக்கி மார்பு என்பதனைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். 13. பா. பா: தோத்திரப் பாடல்கள். கண்ணன் பிறப்பு.1