பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விட்டு சித்தன் விரித்த தமிழ் கிடத்தும் விழாவில் பிரமன், திவ்வியமான தொட்டிலைக் கொணர்ந்து சமர்ப்பிக்கின்றான்; இது மாணிக்கத்தையும் வயிரத்தையும் இழைத்த தங்கத்தொட்டில். இதை தினைந்து யசோதை நிலையில் தன்னைப் பாவித்துக் கொண்டு, மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன்னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி புணக்குப் பிரமன் விடுதந்தான் மானிக் குறளனே! தாலேலோ! வைம் அளந்தானே தாலேலோ (1.4 : 1) ஆணிப்பொன்.மாற்றுயர்ந்த பொன்; வண்ணம். அழகிய, பேணி.விரும்பி; விடுதந்தான்-அனுப் பினான்; மாணி.பிரமச்சாரி, வையம்.உலகம், என்று தாலாட்டுகின்றார் ஆழ்வார். சிவபெருமான் திருவரைக்குச் சேரும்படியான பொன்மணி, நடுநடுவே கலந்து கோக்கப் பெற்ற அழகிய இடைச்சுரிகை, அழகிய மாதுளம் பூக்கோவையான அரைவடம்-என்பவற்றை அனுப்பியுள்ளான். இவற்றை நினைந்து தாலாட்டுகின்றார். குபேரன் ஐம்படைத் தாலியையும் முத்து வடத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்து அஞ்சலி பண்ணிக் கொண்டு நிற்கின்றான். இதனை ஆழ்வார், . . . . . எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழுவில் கொடையான் வயிச்சி ரவணன் தொழுதுஉவ னாய்கின்றான்; தாலேலோ! து மணி வண்ணனே தாலேலோ (1.4 5) (எழில்-அழகு ஆரம்-முத்து வடம்; வழு இல்-குற்ற மற்ற, வயிச்சிரவணன்-குபேரன் (பிரமபுத்திர னான புலஸ்திய பிரசாபதியினுடையபுத்திரனாகிய