பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் gy விச்வர முனிவனுக்குப் பரத்வாச புத்திரியினிடம் பிறந்தவன்); தொழுது. அஞ்சலி பண்ணி.; என்ற பாசுரத்தால் தாலாட்டி மகிழ்கின்றார். இந்திரன் கிண்கிணியையும் (3), தேவர்கள் பலர் கூடி வலம்புரிக்சங்கு, சேவடிக் கிண்கிணி, கைவளையல்கள், தோள் வளையல் களையும் (4), வருணன் முத்தார்த்தையும் பவளவடத் தையும் (6), பெரிய பிராட்டியார் துளசி மாலையையும் கற்பகப் பூக்களாலான நெற்றி மாலையையும் (7), பூமிப் பிராட்டியார் கச்சுப்பட்டை, பொன்னாலான உடைவாள், கரைகட்டிய சேலை (யசோதைக்காக?)யையும், கனக. மயமான தோள்வளையல்களையும், காம்புகளுடன் கூடிய பொற்பூவையும் (8), துர்க்காதேவி கஸ்தூரி, கருப்பூரம், சந்தனம் முதலிய நறுமணப் பொடிகள், மஞ்சள் பொடி, கண் மை, சிந்துரம் ஆகியவற்றையும் (9) அனுப்பியவற்றை யெல்லாம் நினைத்துக் கொண்டு தாலாட்டுகின்றார். இதுவே பிற்காலப் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் *தாலப்பருவச் செயல்களாக வளர்ந்ததாகக் கருதலாம். தவழும் பருவம்: தொட்டில் பருவம் கழிந்து தவழ்ந்து விளையாடத் தக்க பருவம் வந்தெய்துகின்றது. பிள்ளைப் பெருமாளுக்கு. இப்பருவத்தில் அவன் நீணிலாமுற்றத்தே போந்து தவழ்ந்து புழுதி அளைவது, அம்புலியை (சந்திரனை) அழைப்பது என்பவற்றை யசோதைப் பிராட்டி அநுபவித்து, அவனுக்கு உகப்பாகச் சந்திரனை வரச் சொல்லித் தான் பலகாலும் அழைத்த நிலையை ஆழ்வாரும் அநுபவபூர்வமாக பேசி மகிழும் பாசுரங்களில் நாமும் ஆழங்கால் படுவோம் (1.5). 'சந்திரா, என் குழந்தை கண்ணன் நெற்றியிலே சுட்டி அசையவும் அரையிலே சதங்கை கிண் கிண்’ என்று ஒலிக்கவும், முற்றத்தில் தவழ்ந்து சென்று புழுதி அளை கின்றான். இந்தச் சிறு விளையாட்டைக் கண்டால் நீ கண் படைத்த பயன் பெறுவாய். இந்தப் பிள்ளையின் சேட்டை