பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விட்டு சித்தன் விரித்த தமிழ் களைக் காண்கின்ற காரணமாக நீ இங்கே போந்து குழந்தையின் கண்ணில் தென்படுவாயாக’ என்று யசோதைப் பிராட்டி அம்புவியை அழைக்கின்றாள் (1). அடுத்துப் பேசுவது: என்சிறுக் குட்டன் எனக்கோர் இன்னழுது எம்பிரான் தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் அஞ்சன வண்ணனோ(டு) ஆடல் ஆட உறுதியேல் மஞ்சில் முறையாதே, மாமதி மகிழ்க் தோடிவா (2) :அஞ்சனம்-மை: ஆடல் ஆட-விளையாட, மஞ்சு. மேகம்} . . . ... - - - என்ற பாசுரம் பேசுகின்றார். மாலைக் காலத்தில் பெற்றோர் குழந்தைகளை இடுப்பில் எடுத்துக் கொண்டு கநிலா நிலா ஒடிவா; நில்லாமல் ஒடிவா’ என்று கையால் சந்திரனை அழைக்கும் வழக்கப்படிச் சந்திரன்ை அழைக் கின்றாள் யசோதைப் பிராட்டி, சந்திரன் மேகத்தில் மறைந்து போதல் இயல்பாதலின் மஞ்சில் மறையாதே மாமதி ஒடிவா என்கின்றாள். இப்படி அழைத்தும் சந்திரன் வரக் காணாமையால் அழகில் தன்னோ டொப்பார் எவரும் இல்லை’ என்ற செருக்கினால் வாரா திருக்கின்றான் என்று கருதி அவன் செருக்கு அடங்கப் பேசுகின்றாள். சந்திரா, நீ இப்போது தேய்வதும் வளர்வதுமாக உள்ளாய், களங்கமும் உன் பால் உண்டு. இப்படியில்லாமல் நீ எப்போதும் முழுமதிய மாகத் திகழ்ந்துக் களங்கமும் நீங்கி செயற்கை யழகுடன் திகழ்ந்தாலும் என் சிறுகுட்டன் முகத்திற்குச் சிறிதும் ஒப்பாகமாட்டாய். ஆகையால் உன் செருக்கை ஒழித்து நின்னைக் காட்டிலும் மிக அழகிய முகமண்டலத்தை