பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விட்டு சித்தன் விரித்த தமிழ், என்று அட்ைசியமாக நினைக்கின்றாய் எ ன் ப து தெரிகின்றது; இவனைச் சிறியன் என்று கருதற்க; முன்னொரு காலத்தில் பிரளயம் வந்தபோது உலகங்களை யெல்லாம் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பசுங் குழந்தையாக இருந்தவன்; இப்படிப்பட்டவன் சீறி நின் மீது பாய்ந்து உன்னைப் பிடித்துக் கொள்ளவும் நேரிடும். ஆகவே, இவனை அவமதியாமல் உடனே விரைந் தோடிவா என்கின்றாள். இன்னோர் அச்சுறுத்தல்: தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய பேழை வயிற்றெம் பிரான்கண்டாய், உன்னைக் கூவுகின்றான் ஆழிகொண் டுன்னை யெறியும் ஐயுற வில்லைகாண் வாழ் உறுதியேல் மாம தீ மகிழ்க் தோடிவா. (9) (தடகை ஆர்.பெரிய கை நிறைய: பேழை வயிறு. பெருவயிறு: ஆழி.சக்கரம், எறியும்.வெட்டி விடுவான்; ஐயுறவு-ஐயம்: உறுதியேல்.கருதியேல்; இதில் :சந்திரா, இவன் உன் ைன அழைப்பது வெண்ணெயை வாரி விழுங்கினதுபோல ஆசையின் கனத்தி லானது. வெண்ணெய்த் தாழியை இவனுக்கு எட்டாதபடி வைத்தால் கல்லை வி ட் .ெ ட றி ந் து அத்தாழியை உடைப்பது போல, நீயும் வாரா திருந்தால் இவன் சக்கரா யுதத்தை உன்மீது ஏவி உன் தலையை அறுத்திடுவன்; ஆதலால் பிழைத்திருக்க விரும்பினால் பிகு பண்ணாது பெருந்தன்மையாய் வந்துவிடு' என்கின்றார். இந்தச் செய்திகளைக் கூறும் முறைதான் பிற்காலத்து பிள்ளைத் தமிழில் அம்புலிப் பருவமாக முகிழ்த்தது என்று கருதலாம். ... . . . . . . . . . . . . .” . :