பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 81 செங்கீரைப் பருவம்: இளமைப் பருவத்து விளையாடல் களில் செங்கீரையாடுவது என்பது ஒன்று. அதாவது. தாய்மார் முதலானோர் குழந்தைகளைத் தாமே ஆட்டு விப்பு தொரு கூத்து. பிள்ளை தனது இரண்டுகைகளையும் முழந்தாளையும் ஊன்றித் தலையை நிமிர்த்திக்கொண்டு ஆடுதல் என்பாரும் உண்டு. இவ்விளையாட்டைக் காண வேண்டும் என்று விரும்பிய யசோதைப் பிராட்டி எனக் கொருகால் ஆடுக செங்கீரை ஆடுக ஆடுக 1.6:1,2,3,4, என்று வேண்டி அதனை அதுபவித்தாற் போலவே ஆழ்வாரும் தம்மை யசோதை நிலையில் பாவித்துக் கொண்டு பேசி மகிழ்கின்றார். இத்திருமொழியிலுள்ள பாசுரங்கள் யாவும் படித்து இன்புறத் தக்கவை. இரண்டு பாசுரங்களை மட்டிலும் காட்டுவேன். ஒரு பாசுரத்தில் செங்கீரையாடும் போது திருமார்பில் உறையும் பிராட்டிக்கு அசைதல் உண்ட்ாகாதபடி ஆடவேண்டும் என்கின்றார் (1). இன்னொரு பாசுரம்: உன்னையும் ஒக்கலையிற் கொண்டுதம் இல்மருவி உன்னொடு தங்கள்.கருத் தாயின செய்துவரும், கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் - கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கருளி மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில்சூழ் சோலை மலைக்கரசே! கண்ண புரத்தமுதே! என்அவ லங்களை வாய்! ஆடுக செங்கீரை: ஏழுல கும்.உடையாய் ஆடுக ஆடுகவே – ? .638 (ஒக்கலை - இடுப்பு: கன்னியர்.இளம் பெண்கள்; தெற்றிவர். தொடுத்து வரும்படி; அவலம். துன்பம்.) என்பது. இதில், :பிரானே, நீ எப்படிச் செங்கீரை سنات வேண்டுமென்றால், உன்னை இடுப்பில் எடுத்துக் கொண்டு தங்கள் தங்கள் இல்லத்திற்குச் சென்று தங்கள் விருப்பப்படி வி. 6 - -