பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விட்டு சித்தன் விரித்த தமிழ் உன்னை யதுபவித்து வருகின்ற கன்னிப் பெண்களும் மனம் மகிழும்படி ஆடவேண்டும்; சாமானியமாகப் பார்க்கின்ற எல்லாருடைய கண்களும் குளிரும்படி ஆட வேண்டும்; கவிதொடுக்கவல்லவர்கள் பிள்ளைக் கவிகள் பாடிக் கொண்டு வரும்படி ஆடவேண்டும் என்கின்றார். இதற்கு அடுத்த பாசுரம்: பாலொடு கெய்தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் கல்லகருப் பூரமும் காறிவர கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளை போல்சில பல்லிலக லே நிறத்தழகார் ஐம்படை யின்கடுவே இன்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை - ஏழுல கும் உடையாய்! ஆடுக ஆடுகவே (1 6:9) |ஒண்-அழகிய பங்கயம்-தாமரை மலர்; நாறி-மணம் வீசி, கோலம்.அழகிய; கோமளம்.இளைய தான்; இலக.விளங்க; ஐம்படைஐம்படைத்தாலி) என்பது. இதில், கண்ணபிரான் நெய், பால், தயிர் முதலியவற்றைப் பலகாலும் திருமேனியில் பூகிக்கொள்வ தனாலும் செங்கீரையாடும்போது அவை நல்ல பரிமளம் கமழா நிற்கும். அப்படிச் செங்கீரையாடுகையில் வாயைத் திறந்து சிறிது சிரிக்கும்போது கர்ப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? (நாச். திரு. 7:t) என்றபடி இயற்கையாகவே தாமரைப்பூ பச்சைக் கற்பூரங்களின் நறுமணமுடைய திருப்பவளத்தின் பரிமளமும் வீசும். வாயினுள்ளே வெள்ளியரும்புகள் போன்ற சில பற்கள் ஒளிரும்: திருமார்பிலனிந்த ஆபரணங்களின்மேல் வாயி லூறுகின்ற அமுதநீர் இற்று இற்றுவிழும். இப்படிப்பட்ட நிலைமைகளுடன் செங்கீரையாடுமாறு வேண்டுகின்றாள். இத்திருமொழியில் உலகு படைத்து உண்டல், நரசிம்மர்