பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 83 வதார தீரச்செயல்கள், கோவர்த்தனம் தூக்கிக் கல் மாரி காத்தமை, மதுகைடவர்களை நிரசித்து நான்மறைகளை மீட்டுக் கொணர்ந்தமை, குவலயா பீடத்தைக் கொன் நமை, ஏழ்விடைகளை அடக்கினமை, இரட்டை மருத மரங்களைச் சாய்த்தமை, காளியன் தலைமீது நர்த்தன மாடி அவனை அடக்கியமை, வைதிகன் பிள்ளைகளை மீட்டுத் தந்தமை போன்ற தீரச் செயல்கள் குறிப்பிடப் பெறுகின்றன. இம்முறைதான் பிற்காலப் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் செங்கீரைப் பருவம் அமைவதற்கு முன் னோடியாயிற்று என்று கருதலாம். - . . . . ." சப்பாணி கொட்டுதல்: இஃது ஒரு கையோடு மற்றொரு கையையும் சேர்த்துக் கொட்டுதலாகிய விளையாட்டு. சப்பாணி கொட்டுதல்-சக பாணி கொட்டுதல், பாணிகை. ஒரு கையோடு மற்றொரு கையைச் சேர்த்துத் தட்டுதல், இத்திருமொழியில் (1.7) பல பாசுரங்களில் வரும் சப்பாணி என்ற சொல் சப்பாணி கொட்டியருள் என்று பொருள்படும். அரைச்சதங்கைகள் கிண்கிணியார்க் கவும் முத்துப்போன்ற பற்கள் விளங்கவும் (1), தன் அரையிலிருந்து இழிந்து தந்தை அரையிலிருந்து கொண்டும் (2), மீண்டும் தன் மடிக்கே வந்து அமர்ந்தும் (3), சந்திரனை அழைத்தும் (4), சப்பாணி கொட்டுமாறு வேண்டுகின்றாள் யசோதைப் பிராட்டி. திருவரையில் படிந்த சேற்றையும் புழுதி மண்ணையும் கொணர்ந்து வந்து தன்மேல் உறைக்கப் பூசியும் (5), தேருய்த்த கைகள் (6), கடல் கலங்க சரத் தொட்ட கைகள் (7), இலங்கை அரக்கர் அவிய அடுகணை தொடுத்த கைகள் (8), இரணியன் மார்பம் பிளந்திட்ட கைகள் (9), ஆழ்கடல் தன்னை கடைந்திட்ட கைகள் (10) என்று கைகளைப் புகழ்ந்து சப்பாணி கொட்டுமாறு வேண்டுகின்றாள். எடுத்துக்காட்டாக இத்திருமொழியில் ஒரு பாசுரம்: - - - ' ' ... ". . புட்டியிற்சேறும் புழுதியும் கொண்டுவந்து ஆட்டி அமுக்கி அகம்புக் கறியாமே