பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 85 ஒலிக்கவும் மதநீர் பெருகவும் மெல்ல நடக்கும். அதுபோல, பிள்ளைப் பெருமாள் தளர்நடை நடக்கும்போது காலி லணிந்துள்ள சதங்கைகள் கிண்கிணிக்கும்; இடையிற் கட்டிய சிறுமணிகள் பறைபோல் ஒலிக்கும்; நடக்கின்ற ஆயாசத்தினால் உடலில் வேர்வை நீர் பெருகும் என்கின்றார். புன்முறுவல் செய்துகொண்டே தளர்நடை நடக்க வேண்டும் (2). தன் வாயில் நின்றும் கரும்புச்சாறுபோல் இனிமையான நீர் வடியும்படிச் சிரித்துக்கொண்டு தனக்கு முத்தம் கொடுக்கும் தன்மையுள்ளவன் (4). மலர்ந்த தாமரைப் பூவினின்றும் தேன் சிறுசிறு துளியாய்ப் பெருகி வடிவது போலத் தன் வாயினின்றும் இடைவிடாமல் வாலெயிற்றுாறிய நீர் பெருகவும் நடந்து போகும்போது திருவரைமணிகள் கணகணவென்று ஒலிக்கும் (7). பரந்த திருவடிகளைக் கொண்டு மலர் மெத்தையின்மீது காலுறுத் தாமல் மெல்ல நடக்கவேண்டும் (9). நெற்றியில் தொங்கு கின்ற சுட்டி அசையவும், குறியிலிருந்து சிறுநீர் துளித்துளி யாகச் சொட்டவும் நடக்கவேண்டும் (10). இத்திருமொழி வருகைப் பருவத்திற்கு வழியமைத்துத் தந்தது என்று கருதலாம். அச்சே அச்சோ: குழந்தைகள் அன்னையர் இடுப்பில் ஏறுவதற்காக ஓடிவந்து அவர்களைத் தழுவி அனைத்துக் கொள்ளும் இயல்பை வேண்டுவது இது. அச்சோ என்பதுமுற்காலத்தில் குழந்தையை அனைத்துக்கொள் என்று வேண்டுவதற்கு வழங்கிய குறிப்புச் சொல். கண்ணன் தன்னை அணைத்துக் கொள்ளுதலை நினைக்கும்போது தோன்றும் பரமானந்தத்தில் மூழ்கி நெஞ்சுருகிச் சொல்லி ழந்து வாய்விட்டுச் சொல்லமாட்டாமல் அவ்வாச்சரியத்தை ஒரு தரத்திற்கு இருதரம் அச்சோ அச்சோ என்கின்றாள் 1. பிற்காலப் பிள்ளைப் பாட்டின் முத்தப் பருவத் திற்கு ஆடி அமைத்தலுக்கு மூலம் இது.