பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்றும் கூறலாம். எனவே, இது-இங்கு அனைத்துக் கொள்' என்ற பொருளைத்தரும் சந்தர்ப்பத்தால் குறிக்கும் சொல்என்று கருதினும் அமையும். . இத்திருமொழியில் (1.9) இரண்டு பாசுரங்களை க் காட்டுவேன். - . மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில் தக்கதி தன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய சக்கரக் கையனே அச்சோ! அச்சோ! - சங்கம் இடந்தானே அச்சோ! அச்சோ! (7) (கிளறிய கலக்கின; சங்கம்-சங்கு இடத்தான்.இடக் கையில் ஏந்தியவன்) . . . . . . . . . . . . என்பது ஒரு பாசுரம், மாவலியின் தானத்தில் குறுக்கிட்ட சுக்கிரனின் கண்ணைக் குத்திக் கலக்கிய சக்கரக் கையனே! என்னை அணைந்து கொள்' என்கின்றார் இதில். அடுத்த பாசுரம்: என்னிது மாயம்:என் னப்பன் அறிந்தில்ன் முன்னை வண்ணமே கொண்டள வாய்என்ன மன்னு கமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியனே! அச்சோ! அச்சோ *。。。ー・ ・ 。 。 வேங்கட வாணனே! அச்சோ! அச்சோ! (8) (மாயம்-மாயச் செய்கை; அப்பன்-தந்தை; முன்னைய வண்ணம்.யாசிக்கவந்தபோது இருந்த வடிவம்; நமுசி.மாவலி மகன்; மின்னு.விளங்குகின்ற1 - என்பது இரண்டாவது பாசுரம், இதில், நமுசி. திரிவிக்கிர மனோடு நீண்ட நேரம் வழக்காடி, எம்பெருமான் சொன்ன சமாதானங்களைக் கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாக இருக்க, எம்பெருமான் வளர்ந்த திருவடியினால் அவனை ஆகாயத்தில் சுழன்று