பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 37 விழும்படி செய்தனன் என்ற வரலாறு காண்க. இத்தகைய பிரானே! என்னை வந்து அணைக என்கின்றார். புறம் புல்குதல் : முதுகிற் கட்டிக் கொள்ளல். தாய் அமர்ந்துகொண்டு ஏதாவது பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவளுடைய குழந்தை பின்பக்கமாக வந்து முதுகில் அணைந்து கொள்ளலை இன்றும் காணலாம். யசோதைப் பிராட்டி அக்காலத்தில் கண்ணன் இவ்வாறு கட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாப் போலே ஆழ்வாரும் தம்மை அவளாகப் பாவித்துத் தம் முதுகில் கண்ணன் வந்து கட்டிக் கொள்வதாகப் பாவநா பிரகர்ஷத் தால் (சிறந்த கற்பனையால்) அநுபவித்து இனியரா கின்றார் (1.10). - . . * : , வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க - மொட்டு துணியில் முனைக்கின்ற முத்தேபோல் சொட்டுச்சொட் டென்னத் துளிக்கத் துளிக்கஎன் குட்டன்வந் தென்னைப் புறம்புல்குவான் - கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்: (1) (வட்டு . இரண்டு நீல் ரத்ன வட்டுகள்; வளர்கின்ற . நீண்டு கொண்டிருக்கின்ற; மாணிக்க மொட்டு , இந்திர நீலமான அரும்பு, சொட்டு சொட்டு என்ன . சொட்டுச் சொட்டு என்று ஒசையுண் டாகும்படி; துளி துளிக்க . பல தரம் துளியாகி என்பது இப்பதிகத்தின் முதல் பாசுரம். இதில் வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு என்றது கண்ணனது குறியை நிறத்தாலும் அமைப்பாலும் உவமை. சமுளைக்கின்ற முத்து என்றது அதினின்றும் வெளி வருகின்ற சிறுநீரை. சிறுநீர்த் துளிகள் இற்று இற்று மீண்டும் வருதலால் சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என்கின்றார்.