பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 விட்டு சித்தன் விரித்த தமிழ் மூத்தவை காண முதுமணற் குன்றேறி கூத்துவந் தாடிக் குழலா லிசைபாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்தவக் தென்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (8) (மூத்தவை . வயது முதிர்ந்த இடைச் சனங்கள்; வாய்த்த . கிட்டின; மறையோர் . முனிவர்கள்; இமையவர் - தேவர்கள்; ஏத்த - துதிக்க, உவந்துமகிழ்ந்து; - இதில், பிள்ளைப் பெருமாள் எல்லாரும் காணும்படியாக மிகவும் உயர்ந்ததொரு மணற்குன்றின்மேல் ஏறி நின்று தான் விரும்பின பெண்களின் பேரைச் சொல்லுதலும் தன் மேல் சினங்கொண்டிருக்கும் பெண்களின் காலைக் கையைக் கட்டிக் கொண்டு பொறுப்பித்தலும் முதலான ஒலியின் குறிப்புகள். தன்னோடு பழகும் பெண்கள் உணரும்படிப் புல்லாங்குழல் ஊதியும், நிலவறைகளில் கிடக்கும் பெண் களும் இவ்விடத்தைவிட்டு ஓடோடி வந்து காண்கையாலே மிகவும் மனம் உகந்து கூத்தாடியும் நிற்க, அவனுடைய சேஷ்டிதா ரசத்தை அநுபவித்து இருடிகளும் தேவர்களும் வணங்கித் துதிக்க இப்படிக் கூத்தாடின அழகுடன் அப் பிரான் வந்து தன்னைப் புல்கவேண்டும் என்பது ஆழ்வாரின் அrெ, - அப்பூச்சி காட்டுதல் : இது சிறு பிள்ளைகளின் விளை யாட்டு. கண்ணை இறுத்துவது, மேல் இமையை மடக்கிக் கொண்டு இதர பிள்ளைகளை வெருட்டுவது, மயிரால் முகத்தை மறைத்துக் காட்டுதல் முதலாகச் செய்யும் பயங்கரமான பாலசேட்டைகள் பூச்சிக் காட்டுதலில் அடங்கும். - மெச்சூது சங்கம் இடத்தான்கல் வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்