பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 89 பத்துனர் பெறாதன்று பாரதம் கைசெய்த அத்து தன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (1)

மெச்சு . அனைவரும் கொண்டாடும்படி; இடத் தான் . இடக்கையில் ஏந்தியுள்ளவன்; பொறை - பொறுமை, கை செய்த அணிவகுத்துச் செய்த: துரதன் . கண்ணன்) --

என்பது இப்பதிகத்தின் (2.1) முதல் பாசுரம். இதில் தூது சென்று, பத்துர்கூட பெறமுடியாது போர் செய்வித்து பாண்டவர்கட்கு வெற்றி தந்த கண்ணன் அப்பூச்சி காட்டுவதை ஆழ்வார் அநுபவிக்கின்றார். இப்பாசுரத்தில் ஈற்றடி குறித்து ஒர் ஐதிகம். இப்பாசுரத்தை நம்பெருமாள் சந்நிதியில் உடையவர் கோஷ்டியில் உய்ந்த பிள்ளை' என்ற பெயர் கொண்ட அரையர் அபிநயிக்கும்போது *அத்துணதன்' என்னும்போது கண்ணபிரானையும் அப்பூச்சி' என்னும்போது கண் இமையை மடக்கிக் கொண்டு வருவ தையும் காட்டி அபிநயிக்க, உடையவரின் பின்புறம் எழுந்தருளியிருந்த எம்பார் : இராமாதுசரின் ஒன்றுவிட்ட தம்பி) தம் இரு கைகளையும் திருத்தோள்களோடு இணைத்துக் காட்ட, அரையரும் தாம் முன் அபிநயித்ததை விட்டு எம்பார் காட்டியதுபோலவே, எம்பெருமான் திருத் தோள்களில் சங்கு சக்கரங்கள் தரித்துக் கொண்டிருப்பதை அந்வயிக்க, உடையவர் மிகவும் உகந்து, கோவிந்தப் பெருமாள் (எம்பார்) இருந்திரோ?’ என்றாராம், இதனால் ஏற்படும் விளக்கம் - துர்தனாய் தன் செளலப்பி யத்தை வெளியிட்டு கம்மிலே ஒருவன்’ என்று இவ்வுலகத் தினர் கருதும்படி இருப்பவன் அவர்கள் அஞ்சும்படி சில சமயம் ஈச்வரத்துவச் சின்னங்களைக் காட்டுகின்றான் என்பது. இஃது ஈற்றடிக்கு உள்ளுறைப் பொருள். சேப்பூண்ட சாடு சிதறி திருடிநெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால்