பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 9t. வரவுங்காணேன் வயிறசைத்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே! 1 ) (அரவு-பாம்பு; அணை.மெத்தை; அம்மம் உண்ணமுலையுண்ண, உச்சி கொண்டது.உச்சிப் போதாய் விட்டது. வரவு. வருவதை சோர்ந்து. பால் வடிந்து; திரு.அழகு.1 என்பது முதல் பாசுரம். ஆயர் ஏறே! நேற்று இரவும் முலையுண்ணாது உறங்கிப் போய் விட்டாய்; இப்போதும் பொழுது விடிந்து உச்சிப் பொழுதாய் விட்டது. ஆதலால் உறக்கம் தெளிந்து படுக்கையினின்றும் எழுந்திரு நீயே எழுந்திருந்து அம்மம் உண்ண வேணுமென்று சொல்வி வருவதையும் கண்டிலேன். என்முலைகள் பால் வடிந்து பெருகிக் கொண்டுள்ளன. அழகிய நின்வாயை வைத்து முலையுண்பாய்' என்கின்றார். காது குத்தல்: யசோதைப் பிராட்டி பிள்ளைப் பெருமாளுக்கு காது குத்திக் காது பெருக்கிக் காதணிகளும் இட்டு அநுபவிக்க ஆசைப்படுகிறாள். இந்த விழாவுக்கு ஊரிலுள்ள பெண்களையெல்லாம் அழைக்கின்றாள். வந்தவர்கட்கு மரியாதை செய்யப் பொருள்களைச் அழைக்க அவன் காது நோகும் என்று மறுக்க, அதற்கு அவள் அவன் அஞ்சாமைக்குறுப்பான நல்லன. பேசியும் அவனுக்கு உறுப்பான பொருள்களைக் காட்டியும் உடன்படச் செய்து காது பெருக்கினப்டியை ஆழ்வாரும் அவளைப் போல் அநுபவிக்க ஆசைபட்டுத் தம்மை அவளாகப் பாவித்து அவனைக் குறித்துப் பாசுரங்களைப் பேசி அநுபவித்து இனியராகின்றார் இத்திரும்ொழியில் (23).